பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!



06.11.2025

45. பாடுகளை எதிர்கொள்ள ‘விசுவாச தைரியம்’ வேண்டும்!



 தேவன் கிரியை நடப்பிக்கும் உத்தமத்தில் ‘உபத்திரவங்களே’ முதல் பங்காக ஆரம்பிக்கிறது! அவைகள், வெளியில் உள்ள கிரியைகளாய் இல்லாமல், தேவனுடைய பரிசுத்த நோக்கத்திற்கும், நம் ஆத்துமா ஈர்க்கப்படுவதற்கே கிரியை நடப்பிக்கிறது. அது தேவனுடைய கிரியையாய் இருக்கிறபடியால், “உபத்திரவத்தின் நடுவில் தேவன் நடப்பிக்கும் செயல், பாய்ந்தோடும் ஜீவநதியைப்போல்” இருக்கிறது. சூழ்நிலைகளின் மத்தியில், நமது ஆத்துமாவை தேவனே நடத்துகிறபடியால், அச்சமயத்தில் அவரது செயலின் நோக்கத்தை புரிந்து, முற்றிலும் விளக்கிச் சொல்ல இயலாது!

 எப்படியிருந்தாலும், தேவனுடைய தூய்மையான கிரியை வெளிப்பட, “தன்னை இழப்பதற்கு” ஒரு ஆத்துமாவிற்கு தைரியம் வேண்டும்! தன் ஆத்தும வருத்தத்திற்கு ‘மதியீனமான இரக்கமோ அல்லது சுய பட்சாதாபமோ பாராட்டாதிருந்தால்’ கர்த்தருடைய தூய்மைப்படுத்தும் செயல் நமக்குள் வேகமாக நடைபெறும்! 

 இதுவே நம் ஆவிக்குரிய வேகமான வளர்ச்சியாய் இருக்கிறது. ஆனால், ‘மண்ணுக்குரிய வைகளை இழப்பதற்கு’ வெகு சிலரே ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ‘தன்னை இழக்கும் பாதையில்’ சில அடிகள் முன்னேறிச் செல்லும்போது, கடலின் சீற்றங்கள் அதிகரிக்கிற படியால் சிலர் சோர்வடைந்து விடுகிறார்கள், சிலர் தங்கள் பயணத்தை நிறுத்துவதற்கு நங்கூரம் போட்டு விடுகிறார்கள்..... சிலர் ‘பாடுகளின் பயணத்திலிருந்து’ விலகி விசால பாதையை தெரிந்து கொள்கிறார்கள். சுய - அன்பு கொண்ட யாவருக்கும் இதுபோன்ற தாறுமாறுகள் நடந்து விடுகின்றன. உத்தம கிறிஸ்தவ ஜீவியத்திற்கு, விசுவாச தைரியத்தோடு “நீடிய பொறுமையும்” வேண்டும்! 

- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!