நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
11.01.2024 |
02. சுயாதீனத்தை, துர்பிரயோகம் செய்வது சரியா? |
“சுயாதீனம்” வேண்டுமா? ஆம், நிச்சயம் வேண்டும்! ஆனால், இவ்வாறு “பிரமாணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு” சுய-வழி இச்சைகளை நிறைவேற்றுவதற்கல்ல இந்த சுயாதீனம்!! வேதபூர்வ திசையையே மாற்றும் கொடிய சுயாதீனம் இவர்களுக்கு ஒரு கேடா? ஒன்றில் துவங்கும் இவர்கள்.... ஒன்றன்பின் ஒன்றாய் “பிரமாணத்துவத்தை” அவமதித்து “சுயாதீன” சுழல்காற்றில் தங்கள் மனம்போன போக்கில் தாறுமாறாய் போய் கொண்டிருக்கிறார்கள்! தங்கள் “போதைக்குக்கூட” சிறிய அளவில் துவங்கி, அது எல்லாம் ஒன்றுமில்லை எனக் கூறி.... போதைமருந்து வரை சென்றுவிடுகிறார்கள்! என்ன.....மதுபான தடைச் சட்டமா? அப்படியொரு பிரமாணம் வேண்டாம், வேண்டவே வேண்டாம், நாங்கள் சுயாதீனப் பிரியர்கள் என, தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்கும் தவறான முன்னோடிகள்! எங்கும் நாகரீக வாழ்வின் மோகம் தலைவிரித்து ஆடும் காலமாகிவிட்டது! ஆகவே, வேத வசன வாசிப்பும், அதற்கு கீழ்படிவதும் ஏதோ சடங்காச்சாரமாய் மாறிவிட்டது! யார் இவர்கள்? கிறிஸ்தவர்கள் என்ற பெயரில், தங்கள் இச்சையின் போக்கில் செல்ல விரும்பிய சுக- ஜீவிகள்! வேறு யாரும் அல்ல..... இவர்களே அந்திக்கிறிஸ்துக்கள்! ஏனெனில் அந்திக்கிறிஸ்துவின் மறுபெயரே “பிரமாணம் ஏதும் இல்லாதவன்!” என்பதுதான்.