பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
18.01.2024

03. தன் பணிக்கு யாரை தேவன் தெரிந்துகொள்வார்?


                                      

விக்குரிய “யாதொரு கிரியைக்காக” தேவன் தங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்? என்ற வரிசையில் நிற்கிறவர்கள் நடுவில், தேவன் வருகை தந்தார்! வரிசையாக நின்ற எண்ணற்றவர்களின் நீண்ட வரிசைக்கு முன்பாக கெம்பீரமாக நடந்தார்! தங்கள் பட்டம், பதவி, பணம்..... அதோடு, வேத பண்டிதம் ஆகிய தகுதிகளோடு தலைநிமிர்ந்து நின்ற நீண்ட வரிசையை “கொஞ்சம்கூட சட்டைசெய்யாமல்” இவ்வளவு தகுதிகளோடு இத்தனை பெரிய கூட்டம் வரிசையாக நிற்கிறதே என்ற “சிறு சலனம்கூட” இல்லாமல், தேவன் அவர்கள் யாவரையும் ஒன்றன்பின் ஒன்றாய், கடந்து சென்றுவிட்டார்! இவர்கள் பெற்றிருந்த தகுதிகள், வரங்கள் யாவையும் கீழே போட்டுவிட வேண்டும் என தேவன் எதிர்பார்க்கவில்லை..... மாறாக, அவைகள் மீது அவர்கள் சார்ந்து கொண்டிருந்த “அபாரமான நம்பிக்கையை” தேவன் அருவருத்தார்! 

தேவன் யாரைத் தெரிந்து கொள்கிறார்? யாரை அசட்டை செய்து புறக்கணிக்கிறார்? என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால், மானிடனின் இம்மண்ணுலக கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மாத்திரமே, தேவனுடைய வழிகளை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆம், வேதம் நமக்கு விளங்க வைத்திட விரும்புவதெல்லாம் “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்..... பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்.....” (1கொரி.1:27-29) என தெள்ளத் தெளிவாகக் கூறுவதைப் பாருங்கள்!  

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!