நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

21.05.2026 21வது வாரம்
‘ஜெப ஜீவியமே’ என் பரலோகம்! என கண்டேன்!

என் திருமண காலத்தில், எனக்கு மிக நெருங்கிய உறவினர் பலமுறை என் தந்தையிடத்தில் திருமணத்திற்கு கேட்டும், அவர் மறுத்துவிட்டார். இச்சமயத்தில், நீண்ட காலமாய் என்னை விரும்பிய அந்த “பக்தி நிறைந்த வாலிபன்” கன்னியாஸ்திரீ இல்லத்திற்கு வந்தபோது, நானும் அவனோடு பேசினேன். நான் தவறாய் பேசாவிட்டாலும்.... என் சம்பாஷணை ‘ஏனோ’ என் ஜெப வாழ்வை துண்டித்து விட்டது. கொடிய தீமைகள் எனக்குள் வருவதற்கு இதுவே முதல் வாசலாய் மாறியது. மார்க்க கடமைகளை நான் செய்தாலும், ஜெப வாழ்க்கை எனக்குள் குறைந்தபடியால், என்னுடைய ஆவி கொஞ்சம் கொஞ்சமாய் தேவனை விட்டு விலகி குளிர்ந்து போனது. முன்பிருந்த பாவங்களும் உலக மாயைகளும் எனக்குள் வர முயற்சித்ததையும் கண்டேன்! கன்னியாஸ்திரீ மடத்திற்கு எனது அந்த உறவினன் தினசரி வந்து சென்றது, என் ஜெப வாழ்க்கையை முற்றிலும் துண்டித்து விட்டது.
அவனோடு பேசுவதும்..... ஜெபிப்பதும், இரண்டையும் சேர்த்து என்னால் செய்ய முடியவில்லை! சில நல்ல பாதிரிமார்களிடம் என் வீழ்ச்சியைக் குறித்து ஆலோசனை கேட்டபோது, அதுகுறித்து அவர்கள் சிறிதும் அக்கறைப்படவில்லை. என்னோடு பேசின உறவினன் ‘பக்தியுள்ளவன்’ என பெயர் பெற்றிருந்தார்! ஆனால் “ஒரு ஜெபிக்கும் மனிதனாய் இல்லை!” என்பதைக் கண்டு விழிப்படைந்தேன்! எனக்கு ‘ஜெபமே’ பரலோக மாயிருந்தது.... தேவனில்லாத மார்க்க பக்தியை வெறுத்து, மீண்டும் என் நேசரின் பாதத்தில் ஓடிவந்து சரணடைந்தேன்!
- ரத்னம்
