பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

27.11.2025

48. பண்டு பார்க்காத தோட்டம்போல், இருதயம் மாறிடக்கூடாது!

 “நம்மை நாமே தேவனுக்கு முன்பாக நிறுத்தி சோதித்தறிந்து வாழ்ந்திடும் வாழ்க்கை மிக மிக முக்கியம் நிறைந்ததாய் இருக்கிறது!!” தன்னை சோதித்து வாழாத கிறிஸ்தவனின் ஜீவியம் “பண்டு பார்க்காத தோட்டம் போலாகிவிடும்”. ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே, அவனுடைய தோட்டத்தில் ரோஜா மலர்களல்ல, தக்காளிப் பழங்கள் அல்ல...... ‘களைகள்’ மண்டி மூடிவிடும்! தன்னை சோதித்து வாழாத கிறிஸ்தவனின் ஜீவியம் “பூட்டிய வீட்டைப் போலாகிவிடும்”. உங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு சில வாரங்கள் கழித்து திறந்து பாருங்கள்...... எங்கிருந்துதான் இவ்வளவு தூசிகள் வந்ததோ என நீங்கள் வியந்து போவீர்கள்! தன்னை சோதித்து வாழாத கிறிஸ்தவனின் ஜீவியம் “கற்றுக் கொடுக்காத பிள்ளையைப் போலாகிவிடும்”. உங்கள் பிள்ளைக்கு போதனைகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தர அக்கறை செலுத்தாமல் அப்படியே விட்டுவையுங்கள்....... வெகு விரைவில் உங்கள் பிள்ளை காட்டு-மிராண்டி குணம் படைத்தவனாய் மாறிவிடுவான்!!

 கவனம்! தேவனுக்கு முன்பாக உங்களை வைத்து, உங்களை ஆராய்ந்து சோதித்து வாழுங்கள்...... இல்லையேல், உங்கள் வாழ்வு சீரழிந்து போய்விடும்!! அந்த கதி நம் ஒருவருக்கும் ஏற்படாதிருக்க தேவன்தாமே அருள்புரிவாராக, ஆமென்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!