பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


01.08.2024

31.  ‘வயதான பரிசுத்தர்களையும்’ காமத்தில் வீழ்த்திடும் பிசாசு! கவனம்



                                           

 யோசேப்பு ஒரு எபிரேய அடிமை! இருபது வெள்ளிக் காசுக்கு இஸ்மவேலருக்கு அவன் சகோதரரால் விற்கப்பட்டவன்! போத்திப்பாரும், இஸ்மவேலரிடமிருந்து அவனை விலைக்குத்தான் கொண்டான்! ஒரு எளிய, எவ்வித மனுஷீக ஆதரவுமற்ற அற்ப அடிமை அவன்! ஒருமுறையில் சொல்லப்போனால், ஒரு அருவருப்பான அடிமை! ஏனெனில், எபிரேயர் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள் (ஆதி.43:32) என்றே வேதவசனம் கூறுகின்றது. மனிதனின் கணிப்பில், யோசேப்பு அருவருப்பானவனாக இருந்தாலும், சர்வ வல்ல தேவனுக்கு யோசேப்பு மிகவும் அருமையான பரிசுத்தன் என்பது, பிசாசுக்கு நன்கு தெரியும். இத்தனை அருவருப்பான அடிமையைப் பரிசுத்த தேவசமூகத்திலிருந்து வீழ்த்த, எகிப்து தேசத்தின் ராஜரீக கண்ணியத்திற்குரிய போத்திபாரின் மனைவியையே சத்துரு பலிபீடத்திற்கு கொண்டுவந்து விட்டான்! 

  அநேக வயதான பரிசுத்தவான்களை, அதுவும் அநேக ஆண்டு காலம் தங்கள் கர்த்தரை மிகுந்த உண்மையோடு சேவித்த அந்த உத்தம மார்க்கத்தாரை, தேவ சமூகத்திலிருந்து வீழ்த்தி அவர்களை நரக பாதாளத்திற்குப் பங்களாளிகளாகச் செய்ய, அழகான இளம்பெண்களை சத்துரு பயன்படுத்திக் கொண்ட சம்பவங்களெல்லாம் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே! ஆம், சத்துருவே அதைச் செய்தான் (மத்.13:28). இன்றும், என்றும் அவன் அதைச் செய்து கொண்டேதானிருப்பான்!  நாம் யாவரும் மிகுந்த விழிப்புடன் ஜீவிக்க தேவன் கிருபை செய்வாராக!! 

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!