நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
20.06.2024
25. குணசாலியான ஸ்திரீயின் உத்தம பண்புகள்!
அவள், இயேசுவின் பாதத்தில் அமர்ந்து நல்ல பங்கை பெறும்
பெத்தானிய மேரியின் ஆவி கொண்டவள்!
கணவனுக்கு பயபக்தியுடன் கீழ்படியும்
சாராவின் அழகுடையவள்!
சீறிவந்த சத்துருவின் சீற்றங்களை நேர்கொள்ளும்
தெபோராவின் தைரியமுடையவள்!
அறியப்படாத தேசத்திற்கும் அடியெடுத்து வைத்திடும்
ரூத்தைப்போல் தேவ நம்பிக்கை நிறைந்தவள்!
பெற்றபிள்ளையை தேவ தீர்மானத்தின்படி கர்த்தருக்கு தந்திடும்
அன்னாளின் அர்ப்பணிப்பு மிகுந்தவள்!
கர்த்தருடைய மகிமைக்கென்றே தன் பிள்ளைகளை வளர்த்திட
யோகெபேத் போன்று தத்தம் செய்தவள்!
கிறிஸ்துவுக்காக அவரது சபைக்காக தன் பிள்ளைகளைக் கட்டி எழுப்பும்
ஐனிக்கேயாளின் உறுதி கொண்டவள்!
அடுத்தடுத்த சந்ததிக்கு விசுவாசத்தை வைத்துச் செல்லும்
லோவிசாளின் உத்தமம் கொண்டவள்!
எண்ணற்ற விசுவாசிகளின் தேவை அனைத்திற்கும்
தொற்காளின் மனதுருக்கம் கொண்டவள்!
தன் குடும்பத்திற்கும் சபைக்கும் குறிப்பறிந்து உதவிடும்
பெபேயாளின் ஊழிய இதயம் கொண்டவள்!
பரிசுத்தவான்களின் உபசரிப்பிற்கும், மனப்பூர்வ திறந்த வாசலுக்கும்
லீதியாளின் மனதைக் கொண்டவள்!
உயிருள்ள மாதிரியாய் வாழ்ந்து காட்டும் இவளே,
நீதிமொழிகள் 31 - ன் குணசாலியான ஸ்திரீயானவள்!
- ரத்னம்