பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


08.08.2024

32.  ‘கர்த்தருடையவர்களுக்கு’ தூஷண வார்த்தை கூடாது! 


 ரு சமயம், ஆண்ட்ரூ முர்ரே தனது வண்டியில் சென்று கொண்டிருந்தார். ஒரு நதிக் கரைக்கு வரவும், அங்கே ஒரு வண்டி நதியின் கரையில் உள்ள சேற்றில் சிக்கி, அந்த வண்டியை இழுத்து வந்த எருதுகளால் சேற்றிலிருந்து மீள இயலவில்லை. எருதுகள் எவ்வளவோ முயன்றும் அவைகளால் ஒன்றும் செய்ய கூடாது போயிற்று. அந்த வண்டியின் எஜமானன்  தனது கரத்திலிருந்த கம்பால் எருதுகளை அடித்து, தூஷண வார்த்தைகளால் திட்டி தீர்த்து, சபித்துக் கொண்டுமிருந்தான்!

 அந்த துயர காட்சியை கண்ட குருவானவர் ஆண்ட்ரூ முர்ரே உள்ளங்கலங்கினார். “ஏன் அப்பா, கெட்ட வார்த்தைகள் பேசி எருதுகளை அடித்து நொறுக்குகின்றாயே?” என்று கேட்டார். “உங்களுக்கு என்ன தெரியும், தூஷணங்கள் பேசி கம்பால் மடங்கடித்தால்தான், இந்த எருதுகள் சேற்றிலிருந்து வண்டியை வெளியே இழுத்து வரும்” என்றான். ஆண்ட்ரூ முர்ரே வண்டிக்காரனிடம் “நல்லது, உனது மாடு அடிக்கும் கம்பை என்னிடம் கொடு” என்று வாங்கி, ஒரு கனம் பரத்துக்கு நேராக ஏறெடுத்து விட்டு, அப்படியே சற்று அந்த கம்பால் எருதுகளை ஒரு தட்டு தட்டினார்! அவ்வளவுதான், எருதுகள் மடமடவென்று வண்டியை சேற்றிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டது! “என் சகோதரனே, அசுத்தமான தூஷண வார்த்தைகள் பேசாமல் உனது வண்டியின் எருதுகளை நல்ல விதமாக நடத்தினால், வண்டியை எந்த சிரமமுமின்றி கொண்டு செல்லலாம் என்பதை  நீ நன்கு புரிந்துகொள்” என அன்புடன் கூறினார். அன்று, அந்த எருதை ஓட்டிய மனுஷன் “தூஷண வார்த்தைகள் கொடிய அருவருப்பானது” என்பதை ஆண்ட்ரூ முர்ரேயிடம் கற்றுக் கொண்டான்!

- ரத்னம்




வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!