பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
03.09.2020

8. உங்கள் ‘தொழுகையில்’ தேவன் ஒருவர் மாத்திரமே இருப்பாராக!

image

இயேசுவுக்கு ஒரு கூடாரம்! மோசேக்கு ஒரு கூடாரம்! எலியாவுக்கு ஒரு கூடாரம்! என மனுஷனுக்குரிய யோசனையின்படி, சீஷர்கள் கவரப்பட்டார்கள்! (மத்.17:4). எவ்வள பெரிய தேவ மனிதனானாலும், தேவனுக்கு ஆசரிப்பு கூடார தொழுகைப்போல், அவர்களுக்கும் ‘கூடார தொழுகை’ வைப்பது நலமானதல்ல!! மனுஷர் ஆராதனையை தேவன் அருவருக்கிறார்!! எந்த உத்தம தேவ தாசர்களும் அருவருப்பார்கள்.... அதை ஏற்க மறுத்து ஓடுவார்கள்!! மேகம் நிழலிட, அந்த மேகத்தில் அவர்கள் இருவரும் (மோசேயும், எலியாவும்) சீக்கிரத்தில் மறைந்து கொண்டார்கள்!! தனக்கு “கிரீடம்” தரவந்த மக்களிடமிருந்து இயேசு ஒளித்துக் கொண்ட மாதிரியை, தாழ்மையான தெய்வதாசர்கள் யாவரும் கடைப்பிடிப்பார்கள்! இந்த உத்தம தேவ தாசர்கள் பத்திரமாய் தான் உள்ளனர்.... ஆனால் இந்த ‘மனுஷருக்கேற்றப்படி’ சிந்திக்கும் சீஷர்களை நான் என்னவென்று சொல்வது?

இன்று முதல் “இன்னாரைப் பிரியப்படுத்த வேண்டும்!” என எத்தனை கூடாரங்கள் உள்ளதோ, அவை அத்தனையையும் அடியோடு கவிழ்த்துப் போடுங்கள்.

உங்கள் இருதயத்தில் தேவன் ஒருவர்தவிர..... அவர் ஒருவரைப் பிரியப்படுத்துவது தவிர, வேறு யாரும் அங்கு வாசமாய் இருந்திடாதிருக்க கவனம் கொள்ளுங்கள்! அந்த சுத்த இருதயத்தில் அல்லது அந்த ஆசரிப்பு கூடாரத்தில் தேவன் மாத்திரமே வாசம் செய்வாராக! அவர் ஒருவரை மாத்திரமே தரிசித்து ஆராதனை செய்யுங்கள்!! இவர்களே பாக்கிய வான்கள்!! (மத்.5:8).

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!