பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

29.08.2024

35.  ஒரு கோழையாய் பின் வாங்காமல், உறுதிபட நில்லுங்கள்! 

   “பின்வாங்கி நில்! இந்த உலகத்தாரைப் போலவே காரியத்தை நிறைவேற்று! இனி கிறிஸ்தவனாக ஜீவிப்பது கடினம்.... உன் விசுவாச கோட்பாடுகளையெல்லாம் விட்டுவிடு!” என்றே உங்களை ‘கோழைத்தனம்’ தூண்டும்.

   நீங்கள் மெய்யாகவே தேவனுடைய பிள்ளையாய் இருந்தால், எவ்வளவு தான் சாத்தான் உங்களை அதைரியப்படுத்த முயற்சித்தாலும், அதை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் ஒப்புதல் அளிக்காது!

    தேவனுடைய திவ்ய அதிகாரம் “பெலத்தின் மேல் பெலன் நீ அடைய வேண்டும்” என்று கூறி, இந்த வழியை விட்டு விலகிச் செல்ல, மரணமானாலும் அல்லது பாதாளமானாலும் இடைமறித்திட அனுமதிக்காதே! என்றே கட்டளையிடும். “நீ நின்று கொண்டிரு!” என்ற இந்த கட்டளையை உங்களால் ஏற்றுக்கொள்ள கூடாதா? அவ்வாறு உறுதியுடன் கொஞ்சகாலம் நிற்பது, உங்கள் பெலனை அதிகப்படுத்தி, ‘குறித்த காலத்தில்’ நீங்கள் முன்னேறிச் செல்லவே வழிவகுக்கும் என்ற இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள். இங்குதான், பின்வாங்கி நின்று உப்புத்தூணாகிப்போன “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” என ஆண்டவர் இயேசு கூறியதை, நாம் யாவரும் விழிப்புடன் ஏற்றுக்கொள்வோமாக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!