பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

13.02.2025

07. உத்தம சபைக்கு ‘பணம்’ ஓர் முக்கிய பங்கல்ல!

  ணத்தைப் பற்றியோ, பொருளைப்பற்றியோ, இயேசு பேசும்படி நேரிட்ட சமயங்களி லெல்லாம், உலகப்பொருளைக் குறித்த அவருடைய கண்டிப்பான எச்சரிப்பைத்தான் கேட்கிறோம்! இப்படி சொல்வதி னாலே பணம் வேண்டியதேயில்லை என்பது நமது கருத்தல்ல. பணத் தேவைகளை கர்த்தர் அறிந்து, அதை ‘எந்த வழியிலும்’ பூர்த்தி செய்வார்! சபையில், தெய்வ பயத்தில் நிலைத்திருக்கும் ஏழை பரிசுத்தவான்களின் குறைவான காணிக்கையை ஆசீர்வதித்து சபையின் அனைத்து தேவைகளையும் சந்திப்பார்! இருப்பினும் ஒரு உத்தம தேவ சபை, பணத்திற்குப் பின்பாகவோ பணக்காரர்களுக்குப் பின்பாகவோ ஒருக்காலும் போய்விடக்கூடது! 

  ஆம், பாவிகளை இரட்சிக்கும் வல்லமை பணத்துக்கு இல்லை. தேவ ஈவாகிய பரிசுத்த ஆவியைப் பணத்தினால் வாங்க நினைத்த சீமோனை, அன்று பேதுரு பலமாய் கண்டித்தார். ஆவிக்குரிய ஊழியரால் ஆவிக்குரிய வேலை நடக்கும் போது, ஆண்டவர் அவர்களை ஆதரிக்காமல் விடார்! “வேலையாள் தன் கூலிக்கு பாத்திரனாய் இருக்கிறான்” என்றும் “சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு, சுவிசேஷத்தினாலே பிழைப்புண்டாக வேண்டும்” என்றும் கட்டளையிட்ட கர்த்தர், தமது உத்தம ஊழியரையும் அவர்கள் ஊழியத்தையும் இன்றும் என்றும் ‘பொருள் விஷயத்தில்’ ஒருக்காலும் கைவிடவேமாட்டார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!