பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


25.04.2024

17.  ‘உத்தமம் இழந்த சபைக்கு’ எக்காலத்தும் எழுப்புதல் வராது!



 ரிசுத்தவான்கள் கூடும் சபைகளில், ஒரு சிலர் கெட்ட மாதிரிகள் அவ்வப்போது தோன்றுவதால், அந்த தூய சபையை குறைந்த மதிப்பீடு வைத்து பார்ப்பது உகந்த செயல் அல்ல. அவ்வித ‘அவமானிக்கும்’ செயலை நீங்கள் செய்தால், வெகு சீக்கிரத்தில் உங்கள் சபைகளில் ‘நிறையகெட்ட மாதிரி’ முளைத்து வருவதைக் காண்பீர்கள்!? எல்லாம், நீங்கள் “எந்த அளவின்படி நீங்கள் அளக்கிறீர்களோ, அதுவே உங்கள் மடியில் அளக்கப்படும்” என இயேசு கூறிய சத்தியமேயாகும்! தேவன் பரிசுத்தப்படுத்தி வரும் ஒரு சபையை ‘அசுத்தம்’ என கூற பயந்திருப்போமாக!

 உண்மையான ஓர் சபையின் வலிமை, அங்கு முன்னின்று நடத்தும் தலைவர்களைச் சார்ந்ததேயாகும். அவர்களின் உத்தம முன் மாதிரி, சபையில் உண்மையுள்ள விசுவாசிகளிடத்தில் ஓர் மிகப்பெரிய ஆவிக்குரிய எழுப்புதலை நிச்சயமாய் கொண்டு வரும். மிக விசாலமான வாசலை முன் வைத்து உலக சமரசத்திற்கும், அதின் மோகத்திற்கும் விட்டு கொடுத்து வாழும் ஒரு பெரிய சபைக்கு “இந்த தூய்மையான எழுப்புதல்” எக்காலத்தும் வராது! ஆனால், “இந்த உலகத்தில் உள்ள வேறு எதைக் காட்டிலும் தேவனுடைய பிரசன்னமும், அவரது ஆசீர்வாதமுமே மிக மேலானது” என வாஞ்சிக்கும் ‘அந்த சிறிய சபையில்’ தேவன் தன் எழுப்புதலை கட்டளையிடுவார்!

 நல்ல மாதிரி கொண்ட தலைவனும்.... அவரை அண்டியுள்ள தாழ்மையும், உண்மையும், பக்தியும் நிறைந்த விசுவாசிகளைக் கொண்ட ஒரு ஸ்தல சபை எங்கிருந்தாலும், தேவன் தம் எழுப்புதலை அங்கு கட்டளையிடுவார்!

- ரத்னம்


வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!