பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
06.02.2020

2. சிலுவை வழி விலகாத சபைகள் வேண்டும்!

image

‘சத்தியத்தின் உறுதிக்கு’ துயரம் ஏற்படும் என்ற போதகம் வேதத்தில் மிகத் தெளிவாகவே இருக்கிறது! சபை சரித்திரத்திலும் திருஷ்டாந்தமாய் இருக்கிறது! ஆனால், உத்தம சபை சரித்திரத்தின் திருஷ்டாந்தத்தைப் பின்தொடர்ந்து வரும் சபைகளைத்தான் இன்று காண அரிதாய் இருக்கிறது! வீழும் சபைகள், எப்போதாவது உலகத்தைக் குறித்துப் பேச முற்பட்டால், “ரொம்ப மோசமான பாவங்களுக்கு நாம் விலகி நிற்க வேண்டியதுதான்! ‘முழு அளவில்’ நாம் உலகமாய் மாறிவிடக் கூடாதுதான்....” என்றெல்லாம் மழுப்பி பேச துவங்கி விட்டார்கள்!

சபை மாந்தரே கேளுங்கள்: “நம் சபைகளை சீயோன் பர்வதத்தில் கட்டுவோமாக! இந்த உலகத்தை துணிவுடன் ஏறிட்டு நின்று ‘உலகமே! மனந்திரும்பி, நாங்கள் நிற்கும் பர்வதம் ஏறி வாருங்கள்!’ என்றே அழைப்பு கொடுப்போமாக! இதற்கு மாறாக ‘எவ்வித கொடிய சூழ்நிலையிலும்’ உலகத்திற்குள் நாம் இறங்கிவிடாதிருப்போமாக! நம் கிறிஸ்தவத்தின் சிங்காரமே சிலுவைதான்:

அந்த சிலுவையின் முழக்கமோ, “உலகத்திற்கும் சுயத்திற்கும் மரித்து வாழுங்கள்! பிரிந்து வாழுங்கள்! ஒருபோதும், ஒருபோதும் ஒத்தவேஷத்திற்கு சமரசம் சேராதிருங்கள்!” என்ற முழக்கமேயாகும். சிலுவையைக் கண்டடைந்தவர்களில் ஒருவர் கூட, ஒத்த வேஷத்திற்கு தாழ்ந்தது இல்லை!!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!