பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

26.06.2025

26. ‘சத்தியத்தின்படி வாழாதவர்களை’ தேவன் மாத்திரமே பிரித்தெடுக்க முடியும்!

 வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்றும்! ஆவிக்குரிய ஆழ்ந்த சத்தியங்கள் என்றும்! திரண்டு வந்த ஜனத்திரளில் பெரும்பாலோர் “ஏதோ அபூர்வமான ஒன்றில் ஆர்வம் கொண்டார்கள்” அவ்வளவு தான். இவ்வாறு அபூர்வங்களைக் கண்ட பரவச மக்களுக்கென்றே, ‘ஆழ்ந்த சத்தியங்கள்’ எனக் கூறும் புத்தகங்கள், புத்தக சாலையில் நிரம்பி வழிகின்றன. 

  இந்த வெறும் ஆர்வத்தோடு சத்தியங்களைக் கேட்ட திரளானோர், அதன்படி வாழ்வதற்கு ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை! வெற்று ஆர்வத்தைக் காட்டினார்கள், கைக்கொள்ளும்படியான தீராத வாஞ்சையோ அவர்களுக்கு இல்லை!

 ‘இவர்களையெல்லாம் சபையில் பிரித்து எடுக்கும்’ அந்த கடினமான செயலை தேவனிடமே விட்டுவிட வேண்டும். ஆவிக்குரிய சோதனைகளை, தேவனுடைய ஆவியானவர் மாத்திரமே வைத்திட முடியும். வேத வாக்கியங்களில் திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் ‘அவர்களே அறியாமல்’ பரிசுத்த ஆவியினால் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகிலும், பரிசுத்த ஆவியானவரோ ஒரு நபரிடம் கூட “நீங்கள் சோதிக்கப்பட போகிறீர்கள்” என முன் கூட்டியே கூறியதில்லை! ஆகவேதான், நாம் அனைவருமே ‘விழிப்புள்ள ஜீவியம் செய்திட’ கவனம் கொண்டிருப்போமாக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!