பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


12.11.2026                                                                     46வது வாரம்

அவபக்தியை துணிவுடன் சுட்டிக்காட்டும் தாசர்கள் தேவை!


 அபிஷேகத்தால் நிறைந்தவனே, ‘பனி படலம் மூடியிருக்கும்’ இன்றைய கிறிஸ்தவ தலைவர்களின் உண்மையான நிலைமையை காணும் கண்களுடையவனாக இருப்பான்! மங்கிப்போன தரிசனங்களை மீண்டும்  நிலைநிறுத்த  துடித்திருப்பான்! 

 இன்றைய சீர்கெட்ட நிலையை, அபிஷேகத்தால் நிறைந்து “தெளிவுபட காண்பவர்கள்” தாமதப்படாமல், துரிதமாய் எழுந்துவர வேண்டும்! அவ்வாறு அவர்கள் வரவில்லையென்றால், ‘வேகமாய் படர்ந்து வரும் அழிவின் காலத்தை’ இவர்களால் முந்திச் செல்ல முடியாது போய்விடும்!! ஆகிலும், இவ்வாறு சத்தியம் பேசும் தாசர்களை, உலகப்பிடியில் சிக்கியிருக்கும் இன்றைய கிறிஸ்தவம் கண்டிப்பாய் துன்புறுத்தும்!

 வேதபாரகர்களாய் நின்று கொண்டு ‘பிரசங்கிகள்’ வாசித்துக் கொண்டிருக்கும் வேதத்திற்கும்.... ஆவியின் அபிஷேகத்தில் நிறைந்தவர்களாய் ‘கண் தெளிந்து’ வாசிக்கும் வேதத்திற்கும் உள்ள இடைவெளி, ஒரு சமுத்திரத்தின் இடைவெளியாகவே நிச்சயம் இருக்கும்! இந்த வேதபாரகர்களின் குரல்கள் ‘தடித்த குரலாய்’ உபதேச பிரசங்கங்கள் செய்கிறது! ஆனால், சபை வெகுகாலமாய் காத்திருப்பதெல்லாம் “மகா பரிசுத்தஸ்தலத்தின் திரைக்குப் பின்னால் உற்று நோக்கி, அங்கு ‘தேவனைக் கண்ட’ அற்புதத்தால்” ஆட்கொண்டு ஆனந்திப்பவர்களுக்காகவே, இன்னமும் காத்திருக்கிறது!

- ரத்னம் 

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!