நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

18.06.2026 25வது வாரம்
முறுமுறுப்பில்லாத ‘துதி நிறைந்த’ சீஷனின் இருதயம்!

நம் மனமடிவுக்காக காத்திருக்கும் சத்துருவானவன், “இயேசுவின் சீஷனின்” வளர்ச்சியை நிறுத்தி வைக்க இயலாது என்ற உண்மையை, நமக்கு நிகழும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவன் அறிந்து, வெட்கமடைவான்! அதே நேரத்தில், தங்கள் மாம்சத்தின் குமுறலுக்கு இடங்கொடுத்து முறுமுறுப்பது தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தடை என்பதை அந்த சீஷனே கற்றுக்கொள்வான்! இவ்வாறு கற்றுக்கொண்டவர்களே, தங்களின் முறுமுறுத்தலை நிறுத்துவதற்கு கொஞ்சம் கொஞ்சமாய் தேறி, முழுமையை அடைகிறார்கள்!
நம்முடைய ஜெபமாய் இருக்க வேண்டியதெல்லாம், “ஆண்டவரே! முறுமுறுப்பு என்னில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு என் வாழ்வில் ‘துதி மலர’ அருள் செய்வீராக! அதுவே என் இருதயத்தின் ஸ்திரமாய் இருப்பதாக! என் வாழ்வில் ஏற்படும் கடின சூழ்நிலைகளில் நான் ஒடுங்கிப் போகாமல், அந்த சூழ்நிலைகளுக்குள் நான் கடந்து ‘உமது கிருபை’ எனக்குள் வல்லமையாய் கிரியை செய்திடவே தயை செய்தருளும்! உமது கிருபையின் பெலத்தை நான் எப்போதும் சார்ந்து கொண்டு, நான் உம்மை கிட்டிச்சேர உதவிபுரியும்” என்றே ஜெபிப்போமாக! நீங்கள் அவ்வாறு ஜெபிப்பதே, உங்களுக்கு நன்மை பயத்திடும்! கிறிஸ்துவின் சாயலை அணிவித்திடும்!
- ரத்னம்
