நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
தீமோத்தேயுவின் பாட்டி ‘லோவிசாளின்’ கணவர், விசுவாசி அல்ல! ஆகிலும் தன்னிடமுள்ள, விசுவாசத்தைக் காத்து நடந்ததுமல்லாமல், அதைத் தன் மகள் ஐனிக்கேயாளுக்குள் நிலைத்திருக்கச் செய்தாள் லோவிசாள் பாட்டி! அதுபோலவே, ஐனிக்கேயாள் கணவர் ஒரு புறஜாதி கிரேக்கர்! (அப்.16:1). ஆகிலும், கணவர் விசுவாசியாய் இல்லாத சூழ்நிலையிலும், “தன் விசுவாசத்திற்கு ஏற்பட்ட துன்பங்களைச் சகித்து” கணவரின் ‘கிரேக்க மார்க்கத்திற்கு’ ஐனிக்கேயாள் சென்றுவிடவில்லை! தன்னிடமுள்ள விசுவாசத்தில் நிலைத்திருந்து, அந்த ‘மாயமற்ற விசுவாசத்தை’ மகன் தீமோத்தேயுவிடம் நிலைத்திருக்கச் செய்தாள் அவனின் தாய், ஐனிக்கேயாள்! மாயமற்ற விசுவாசம் பெற்றவர்கள், தேவனுடைய பார்வைக்கு முன்பாக மாத்திரமே ஜீவிப்பார்கள்! லோவிசாள் பாட்டி, அவள் மகள் ஐனிக்கேயாள், அவள் மகன் தீமோத்தேயு ஆகியோரின் விசுவாசம், யாதொரு சூழ்நிலையையும், யாதொரு நபரையும் சார்ந்திருக்கவில்லை! எனவேதான், மாறுபட்ட தங்கள் வீட்டு சூழ்நிலைகளில், அவர்கள் தன் தன் விசுவாசத்தை விட்டு விலகவோ, இயேசுவை விட்டு தூரம் செல்லவோ, ஊழியத்தைக் கைவிடவோ, சபையிலிருந்து வழி விலகவோ இல்லை!
- ரத்னம்