நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
நாம் வாழும் இந்த கடைசி காலத்தில் “பொறுக்கி எடுத்தது போன்ற” ஆழமான ஆவிக்குரிய தைரியம் கொண்ட புருஷர்களே தேவனுக்கு தேவையாயிருக்கிறார்கள்! எங்கோ ஒரு மூலையில் ‘எழுப்புதல் எங்கே?’ என்ற கூக்குரலும்.... எங்கோ மற்றொரு மூலையில் ‘உயிர்ப்பிக்கும் புதிதான ஆவியின் அபிஷேகமே’ இன்றைய தேவை எனவும் கூக்குரல் ஒலிக்கிறது! தேவனோ, இந்த இரண்டுமே இன்றைய அழியும் காலத்திற்கு தேவை என்பதை அறிந்திருக்கிறார். தேவனுடைய வல்லமைக்கோ அல்லது அவரது எழுப்புதலுக்கோ பஞ்சம் ஏதும் தேவனிடம் இல்லை! ஆனால் இருட்டில் வாழும் எலிகளுக்கு அவர் ஒருபோதும் எழுப்புதல் தரமாட்டார்! யாதொன்றும் செய்ய இயலாமல், தத்தி செல்லும் முயல்களுக்கு தன்னுடைய அபிஷேகத்தின் வல்லமையை ஊற்றவும் மாட்டார்!
இந்த வேத வசனத்தைப் பாருங்கள்: “அவைகளில் ஒன்றையும் குறித்து கவலைப்படேன்! என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என்றார் (அப்.20:24).
பவுல் அப்போஸ்தலன் வைத்திருந்த இத்தனை மகத்துவமான ஆவிக்குரிய தைரியத்தை விட, குறைவான தரத்தை தேவன் நம்மிடம் ஒருபோதும் விரும்புவதில்லை!