நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
05.09.2024
36. உங்கள் ஆராதனைக்குரியவர் ‘வியக்கத்தகு’ பெரியவர்தானா?
இன்றைய தனிக்கிறிஸ்தவன் தொடங்கி, சபை மட்டும்.... தேவனை மனம் பொங்க ஆராதிக்கும் நிலையைக் காண்பது அரிதாய் போய்விட்டது! தன்னுடைய ‘ஸ்தாபன கட்டுகளில் சிக்கியிருக்கும் தேவனையே’ அவன் காண்கிறான்! தான் இட்ட கட்டளைக்கு இணங்கும் ‘சிறிய தேவனே’ அவனுக்கும், அவன் சபைக்கும் இருக்கிறது! இவர்களின் தேவன் ‘மண்ணுக்குரிய வராய்’ லௌகீக லாப-நஷ்டத்திற்கு உதவும் சிறிய தேவனாய் இவர்களுக்கு காணப்படுகிறார்!
அவன் துன்பம் அடையும் போது அவர் உதவிசெய்ய வரவேண்டும்! அவன் தூங்கும்போது அவர் விழித்திருக்க வேண்டும்! இந்த ஸ்தாபன கட்டுகளில் சிக்கியிருக்கும் ஆராதனையில், தேவனுக்கு வானுயர்ந்த மதிப்பு ஒன்றும் இருப்பதில்லை! ஆனால், பரிசுத்த ஆவியானவர் தேவனை நமக்கு காட்டும்போது “அவர் இருக்கிறவண்ணமாக நாம் கண்டு, ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் மூழ்கி” உள்ளம் நொறுங்கி நெகிழ்ந்து, தேவனை ஆராதித்திடச் செய்கிறது!
தன் தனிப்பட்ட ஜீவியத்தில், கிறிஸ்துவின் மீது சொல்லொண்ணா அன்பினால் பற்றியெறியும் ஒருவன் இருக்கிறானா? எனக்கு அவனை காட்டுங்கள். அந்த பரிசுத்தவானின் வஸ்திரங்கள் கூட, தெய்வ ஆராதனை நறுமணம் மணக்கும்! மெய்யாய் சொல்லுகிறேன் கேளுங்கள்: “வரப்போகும் சர்வ சங்க சபையில், ஆராதனையின் நறுமணம் வீசும் பரிசுத்தவான்கள் மட்டுமே இருப்பார்கள்!”.
- ரத்னம்