நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
09.07.2020 | 6. ‘சோம்பல் கிறிஸ்தவனை’ பகிரங்கப்படுத்தும் இயேசுவின் உபதேசம்! |
இயேசுவின் மெய்யான வார்த்தையாகிய “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்ற யோவான்.15:5-ம் வசனத்தை, சாத்தான் தேவ ஜனங்களின் மத்தியில், அழிவின் போதனையின் முதல்படியாக “எங்களால் எதுவும் செய்யமுடியாது” என தவறான ஆவியில் அர்த்தம் கொள்ளச் செய்துவிட்டான்! பின்பு அதே ஜனங்களிடம், மெல்ல மெல்ல அழிவுக்கு இரண்டாம் படியாக “நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்” என அர்த்தம் கொள்வதற்கு நடத்தி விட்டான்!!
இவனுடைய அருவருப்பான போதகம் பற்றிப்படர்ந்து, தெய்வ பயம் நிறைந்த உண்மை ஆத்துமாக்களையும் பாதிக்கத் தொடங்கி விட்டது. தங்கள் முழு இருதயமாய் நன்மை ஒன்றையே செய்வதற்கு வாஞ்சை கொண்ட இவர்களை, இக்கொடிய போதகம் “தங்களைத் தாங்களே இரட்சிக்க விரும்புகிறவர்கள்” என எள்ளி நகையாடி அவர்களைச் சிறைப்படுத்த முயல்கிறது! ஆனால், தீர்க்கதரிசிகளானாலும் அல்லது அப்போஸ்தலர்க ளானாலும் அவர்களின் உபதேசம் வேதாகமத்தில் நாம் காண்பதோ, ... பிரயாசப்படுங்கள்... அதிக ஜாக்கிரதையாயிருங்கள்... பந்தயப் பொருளை அடைந்திட ஓடுங்கள்... நல்ல போராட்டம் போராடுங்கள்... நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளுங்கள்... அடைந்து விடும்படி நாடுங்கள்... பூரணராகும்படி கடந்துபோங்கள்... சோம்பலாய் இல்லாமல் விழித்திருங்கள் ... என எவ்வளவு தெளிவாய் நம்மை எச்சரித்துப் போதிக்கிறது!!