பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
03.01.2019

1. சீஷர்கள் கண்டடையும் ‘அர்ப்பண’ ஓட்டம்!

image

இரட்சிக்கப்பட்டு, இயேசுவின் உண்மை சீஷனாய் மாறிவிட்ட ஒருவனே, விண்ணிற்குரியவன்! குருவின் அடிச்சுவட்டை பின்பற்றத் துவங்கிய நாள் தொடங்கி... அவனது மாறாத இலக்காய் இருப்பதெல்லாம், கிறிஸ்துவையே அடைந்திட வேண்டும்! அவரது சாயல் அணிந்திட வேண்டும்! என்ற இலக்கு மாத்திரமே ஆகும்! தன்னைச் “சுற்றியுள்ள பாவம், மற்றும் தனக்குண்டான யாவற்றையும் உதறித் தள்ளாமல்” இந்த இலக்கின் பாதை ஓடிட இயலாது.... ஆம், முற்றிலும் அர்ப்பணித்து விட்ட சீஷனாகாமல் அந்த ‘ஓட்டம்’ சித்தி பெறாது!

உலகத்தின் யாவற்றையும் நஷ்டம் என உதறிய அனேகர்.... மீண்டும் திரும்பிவந்து, அதை லாபமாக்கி ‘பின்மாறிய மாந்தர்கள்’ ஏராளம்! ஆனால், ஆதாயமாய் கருதப்படும் இந்த உலகத்தை நஷ்டமாய் மாத்திரம் எண்ணாமல்.... அதை ‘குப்பையாகவும்’ உதறியவர்கள் மாத்திரமே இலக்கை நோக்கி “ஆசையாய் தொடர்ந்து” கிறிஸ்துவையும், அவரது சாயலையும் அடைவர்! (பிலி.3:12,14). ஆம், தங்கள் இலக்கை நோக்கித் தொடரும் ஓட்டத்தை, பரிசுத்த ஆவியின் துணையோடு ஜெயமே ஜெயமென முடிப்பார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!