நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
20.02.2025
08. ‘நமது சம்மதமின்றி’ அவராக நமக்குள் கிரியை செய்திட மாட்டார்!
நாம் கிறிஸ்துவைச் சொந்தமாக்கிப் பிழைக்கும் உயிருள்ள கிறிஸ்தவர்களாய் இருக்க வேண்டும்! அவர் நமக்குள்ளே இருந்தால், வெளியே நின்று அவர் தட்ட வேண்டியதில்லை! சர்வலோகங்களையும் தன் சொல்லால் உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள ஆண்ட வருக்கு ‘நமது சம்மதமின்றி’ நம்மை இரட்சிப்பதுகூட அவரால் முடியாது! மனமில்லாதவர்களை அவர் கட்டாயமாய் இரட்சிக்கிறதாயிருந்தால், உலகத்தார் யாவரையும் ஒரே நிமிஷத்தில் மகிமையில் சேர்த்திருப்பார்! அப்படி அவர் செய்யக் கூடுமென்றால், “உன்னைச் சேர்த்துக் கொள்ள எத்தனை தரமோ நான் மனதாயிருந்தேன், உனக்கோ மனதில்லாமற் போயிற்று என்றும்; உங்களுக்கு மனதில்லையே.....!” என்றும் இயேசு யோவான் சுவிசேஷத்தில் கண்ணீர்விட்டுப் புலம்ப வேண்டியதென்ன? நம்மை தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவே வாஞ்சையோடிருக்கிறார்!
பல சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, நம்மை அவருக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்! இவ்வாறு கிறிஸ்து நமக்குள் வாழ்ந்து, அவர் நமக்குள் வசிக்க இடம் பெற்றால், நாமும் ஆசீர்வதிக்கப்பட்டு, அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருந்திருப்போ மல்லவா?
- ரத்னம்