நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
14.03.2024 | 11. ‘சிலுவை உபதேசம்’ அனேகருக்கு ஏன் இடறல்? |
“நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும்....” என வாசிக்கிறோமே.... (1கொரி.1:23). ‘கிறிஸ்து நமக்காக சிலுவையிலறையப்பட்டாரே’ அதுவா இன்றைய கிறிஸ்தவ மார்க்கத் தாருக்கு இடறல்? இல்லை! “நாம் சிலுவையிலறையப்படுகிறோமே” அதுதான் இவர்களுக்கு இடறல்! ஏனென்றால், இங்குதான் நம் எல்லா சுயமும், அது எவ்வளவு அருமையாயிருந்தாலும் அல்லது எவ்வளவு லாபமா யிருந்தாலும், அவைகள் யாவும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது! அதன் சுய-மரியாதைக்கோ அல்லது சுய-கௌரவத்திற்கோ கிஞ்சித்தும் இடமே இல்லை!!
ஆ, இங்குதான் இவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். தங்கள் பார்வையில் இவர்கள் எவ்வளவு சுய-கௌரவ மதிப்பில் மிதந்து மகிழ்கிறார்களோ அவ்வளவு அதிகம் கோபக்கனலாகிறார்கள்! ஆனால் உண்மை என்ன தெரியுமா? ‘நமக்கு அருமையான’ இந்த எல்லா சுயமும் மரணத்திற்கே உரியது! அது கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சிலுவையில் அறையப்பட்டு விட்டது! இனி, ‘சிலுவை எடுத்து’ கிறிஸ்தவனாய் வாழ வேண்டிய பொறுப்பு நம்மையே சார்ந்ததாகும்!