பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

       19.02.2026                                                                                                8வது வாரம்

‘எதிர்ப்பான சூழ்நிலையை’ ஜெயித்து வாழும் உத்தம கிறிஸ்தவன்!

 தேவனிடத்தில் மனப்பூர்வமான விசுவாசம் கொண்டவனுக்கு ஆயிரம் சத்துருக்கள் எழும்பி வந்தாலும், அந்த உத்தம கிறிஸ்தவனை ‘செயலிழக்கச் செய்திட’ இயலாது! அல்லது அவனுடைய தீவிரத்தை குறைத்திடவும் முடியாது! 

 ஆழ்ந்த விசுவாசம் கொண்ட இவனுக்கு ஏற்பட்டுவிட்ட கொடிய சூழ்நிலை, ஒரு ஆகாய விமானத்தை எதிர்த்து வந்த சூழ்நிலையாகவே மாறியது! ஆகிலும், அந்த எதிர்ப்பான காற்று மண்டலத்தை ‘சாதகமாக்கி கொள்ளும் ஒரு வழியை’ ஆகாய விமானத்தின் பொறியாளர் அறிந்து வைத்துள்ளார். அந்த எதிர்ப்பின் சூழல் ஆகாய விமானத்தை வான் உயரத்திற்கு எடுத்து சென்று இலகுவாய் பயணத்திற்கு வழிவகுத்திடவே ஆயத்தம் செய்துவிட்டது! இந்த ஆகாய விமானத்தை எதிர்த்து வந்த இந்த காற்றுமண்டலம், உதவி செய்யும் அடிமையைப் போல் கைகட்டி பணிவிடையே செய்தது! இதுபோன்ற விளக்கத்தை வெறும் விஞ்ஞான விளக்கம்போல் எடுத்துக்கொள்ளாதிருங்கள். மெய்யாகவே மெய்யாகவே ஒவ்வொரு வலிமையான கிறிஸ்தவர்களும் இந்த கடின எதிர்ப்பின் சூழ்நிலை வழியாகவே கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!