நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
ஒரு சமயம், தேவனுக்கு மகிழ்வுடன் தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்த ஒரு சகோதரன், தன் வாழ்வின் கடின சூழ்நிலை நீங்கினால், தான் கர்த்தரை இன்னும் வலிமையாய் சேவிக்கலாமே என எண்ணினார்! அவருடைய வேண்டுதலை தேவன் ‘சூசகமாய்’ கேட்டு, அதற்குப் பதிலை உடனே அனுப்பினார்!! ஆம், வாழ்வில் கடினம் விலகி சுமுகமான சூழல் அவருக்கு வெகு சீக்கிரமாய் ஏற்பட்டது! ஆனால், அந்த சுமுகமான தன் வாழ்வின் புதிய சூழ்நிலையில், அந்த தேவமனிதன் தான் இடைவிடா உறவுகொண்டிருந்த ‘நேசரை’ காண முடியாமல் தவித்தார்!
இப்போது ஓர் நல்ல பாடத்தை துரிதமாய் கற்றுக்கொண்டார்! “தேவனாகவே என் வாழ்வின் சூழலை மாற்றுவதற்குத் தீர்மானித்தால் அப்படிச்செய்யட்டும்! ஆனால் அவர் அப்படிச் செய்யாதிருக்கும் பட்சத்தில், நானாக ‘எல்லையை விட்டு’ வெளிவரவும் மாட்டேன்…..... அவருடைய இனிய சமூகத்தை இழந்து அல்லலுறவும் மாட்டேன்!!” என்ற பாடத்தையே கற்றுக்கொண்டார். இப்போது இந்த தேவமனிதன் என்ன செய்தார் தெரியுமா? “ஓ, தேவனே! என் மதியீனமான எண்ணத்தை மன்னித்து, நான் தொடர்ந்து உம்மை தரிசிக்கும்படி, நீர் எனக்கென நியமித்த வாழ்வின் சூழலை மீண்டும் தாரும்!” என ஜெபித்து..... மீண்டும், தான் இழந்த நேசரின் ஐக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்!! ஆம், நேசர் இயேசு இல்லாத செல்வம் என்னத்திற்கு? ஏன், அவர் இல்லாத ‘பரலோகமே’ நமக்கு என்னத்திற்கு?