நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

02.10.2025
40. பலன் தரும் கிறிஸ்தவ ஜீவியமே பாக்கியம்!

பாவம் வஞ்சகமாயிருப்பதுபோலவே, மன்னிப்பு கேட்டுக் கொண்டால் போதும் என்பதும் வஞ்சகமே! பிள்ளை விஷத்தை விழுங்கிவிடும்போது, மன்னித்தால் பிழைத்துக் கொள்வானோ? அவன் அதை வாந்தி பண்ண வேண்டுமே! பாவ ஜீவியத்தை என்னால் முற்றிலும் விட்டுவிட முடியுமோ? என்று கேட்கிறோம். இந்தக் கேள்வியே தவறானது!
பாவத்தை விட்டுவிடுவதும், பரிசுத்தமாய் நடப்பதும் நம்மால் ஆகிற காரியமல்ல! கர்த்தர் நம்மில் செய்யவேண்டிய வேலையை நாம் செய்யப் பார்ப்பது பிசகு. கிறிஸ்துவின் கையில் உங்களை விட்டுவிடுங்கள். உங்கள் பாவங்களை மன்னிப்பவர் அவர். உங்களைக் கழுவுகிறவர் அவர். உங்கள் இருதயத்தை மாற்றுகிறவர் அவர். உங்களுக்குள் தமது ஆவியை வைத்து உங்களை மறுரூபமாக்குகிறவர் அவர். உங்களைப் பலப்படுத்திப் பாவத்தின்மேல் வெற்றி கொடுப்பவர் அவர்! நற்கனிகளினால் உங்கள் ஜீவியத்தை அலங்கரித்து பிறருக்கு உங்களை ஆசீர்வாதமாக்குகிறவர் அவர்! அவரே உங்களை முற்றிலும் ஆண்டுகொள்ள இடங்கொடுங்கள். அவர் உங்களுக்குள் வசிக்கட்டும். அவர் உங்களுக்குள் போதிக்கட்டும். அவரே உங்களை நடத்தட்டும். அவரே உங்களைக் காக்கட்டும். அவரே உங்களை உபயோகிக்கட்டும். அவரே உங்கள் மகிமையாக விளங்கட்டும்! இது, எவ்வளவு பாக்கியமான ஜீவியம்!
- ரத்னம்
