பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


30.10.2025

44. சுழ்நிலைகளால் தீட்டுப்படாத வாழ்க்கை உண்டு!


 வ்வளவுதான் வெளிப்புற காரியங்கள் மோசமாய் தோன்றினாலும், அல்லது ஜனங்களால் தீமைக்கு உட்படுத்தப்பட்டாலும், ஆத்துமாவின் அமைதி கூடுமேயல்லாமல் குறைவதில்லை! சூழ்நிலைகள் சற்று மாறுவதுபோல் புது மகிழ்ச்சி உதித்தாலும், மீண்டும், மீண்டுமாய் அமைதியான ஆத்துமாவை மேகங்கள் மறைத்து இடறுகள் கொண்டுவர முயற்சிக்கிறது. தேவனோடு கொண்ட ஆதிநிலைக்கு ஆத்துமா அடைக்கலமானவுடன், யாதொரு சூழ்நிலையும் நம்மை தேவனைவிட்டு பிரித்திட முடியாது!

அதாவது, யாதொரு அசுத்தமும் உள்ளத்தை தீண்டாது:

  1.தனக்கானதை தேடும் அசுத்தம் உள்ளத்தை தீண்டாது!

  2.சோதிக்கப்படாத ‘பொறுப்பற்ற’ வார்த்தைகள் உள்ளத்தை தீண்டாது!

  3.மனுஷீக பிரதிபலிப்பின் அசுத்தம் உள்ளத்தை தீண்டாது!

  4.மனுஷீக பொங்கும் உணர்ச்சிகள் உள்ளத்தை தீண்டாது!

 தீட்டான இவைகள் யாவும், மூடுபனி போல் நம்மை ஆட்கொள்ள துடித்தாலும், அவைகளால் யாதொரு தீர்வும் ஏற்படாது! மாறாக, அவைகள் நமக்கு இன்னமும் அதிகமாய் தீங்கு விளைவித்து நம்மை தீட்டுப்படுத்தவே முயற்சிக்கும். மேலான தீர்வு என்னவென்றால்: நீதியின் சூரியனாகிய ஆண்டவர் எழுந்தருளி, இந்த பனிமூட்டங்களை அகலச் செய்வதுதான்! இவ்வாறு நமக்கு வேண்டிய உள்ளான தூய்மை தேவனிடமிருந்து மாத்திரமே புறப்பட்டு வரவேண்டும். அவர் அருளும் கிரியைகள் இயற்கையாகவே நிகழும்! 

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!