நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
04.05.2023 |
06. பிழையான ஜீவியத்தை மறைக்க ‘வேத வசனத்தை புரட்டுவது’ |
உத்தம அடிகளார் பவுலைப்போல் “இவ்வுலக செல்வத்தின் மதிப்பு, குப்பை!” என பிரசங்கிப்பதற்கு இன்றைய பிரசங்கிகளுக்கு தைரியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் “இவ்வுலகத்தின் செல்வ செழிப்பே இயேசு வழங்கும் சுவிசேஷம்” என துணிகரமாய் பிரசங்கிக்கிறார்களே, அதுதான் கொடுமை!
அன்று 30 வெள்ளிகாசுக்காக இயேசு கிறிஸ்துவின் முதுகில் குத்திய யூதாஸ் காரியோத்தின் கொடுமையிலும் மோசமான கொடுமை! அவனாவது அந்த 30 வெள்ளிக்காசை அல்லது உலக செல்வத்தை தூக்கி எறிந்து விட்டு, செத்துப் போனான்! இவர்களோ உலகத்தின் செல்வத்தை கிறிஸ்தவ மேடைகளில் உயர்த்திக் காட்டி, பேரழிவுக்குள் திரளான ஜனங்களை நடத்திச் செல்வது கிறிஸ்துவிற்கும், இவர்களின் பிரசங்கங்களைக் கேட்கும் கிறிஸ்தவர்களுக்கும் இழைத்திடும் கொடிய வஞ்சகம்!
தங்களின் தாறுமாறான உபதேசங்களுக்கு ஏற்றார்போல், தேவ வசனத்தையே தாறுமாறாய் புரட்டும் நய வஞ்சக பிரசங்கிகளுக்கு நாம் விலகி நிற்போமாக! வேதத்தை நேசித்து வாழ்ந்த உத்தம தியாக புருஷர்களின் களங்கமற்ற கிறிஸ்துவின் ஆவியை மாத்திரமே பருகி வாழ்வோமாக! ஆமென்.