பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
18.03.2021

3. ‘வியாகுல நேரமே’ நாம் கெத்சமனே விரைந்து ஜெபிக்கும் நேரம்!

image

இயேசுவுக்கு மிகுந்த வியாகுலம் (ஹழுடீசூலு) உண்டானபோதெல்லாம், கெத்செமனேக்கு “வழக்கமாய்” சென்றுவிடுவார் (லூக்.22:44). அவ்வாறாகவே, நாம் சந்திக்கும் உபத்திரவங்களும், துன்பங்களும் “நம்முடைய கெத்செமனேக்கே” நம்மை உந்தி நடத்திட வேண்டும்! கெத்செமனேயில் இயேசு தனியாக இல்லை.... தன் பிதாவோடு இருந்தார்! “பரம பிதாவை” தங்கள் வாழ்வின் சீரிய பங்காய் அறியாதவர்கள் யாவருமே, வியாகுல நேரங்களில் “துக்கத்தில் நித்திரை” செய்திடும் இருண்ட அனுபவமாய் பெற்றிருக்கின்றனர் (லூக்.22:45). ஆனால் நமக்கோ, அந்த துக்கத்திற்கு காரணமான சூழ்நிலைகள், நம்மை “எழுந்து” கெத்செமனேக்குச் சென்று ஜெபித்திடவே தூண்டுகிறது!! (வச.46). உண்மையான ஆறுதலும் இளைப்பாறுதலும் கெத்செமனேயில் காத்திருக்கும் அன்பரின் மார்பில் தான் இருக்கிறது!

இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய “வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது” என காணும் அவரது ஜெபத்தின் காட்சி, நம்மை பரவசப்படுத்துகிறது (வச.44).

வியாகுல நேரத்தில் “எந்த மனுஷனிடமும்” சென்று நம் கண்ணீரைக் காட்டி விடாமல், ‘வழக்கமான’ நம் கெத்செமனேக்கு சென்று நம் “பிதாவிடம்” சிந்தும் கண்ணீர் நமக்கு கிட்டிய வாழ்வின் ஒப்பற்ற பாக்கியம் என்றே கூற வேண்டும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!