பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
28.09.2023

16. ஸ்தாபன பலகையா? தெய்வ அன்பின் ஐக்கியமா?


                                 

தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தைப் பெறாதவர்கள், ஐக்கியத்தை பேசவோ அல்லது உருவாக்கவோ முற்படும்போது, “நீங்கள் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள், நாங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறோம்” என்றே சத்தியத்திற்கு சமரசம் பேச வேண்டியதாயிருக்கும்!

பெந்தெகோஸ்தே நாளில் தேவ ஆவியானவர் இறங்கி சீஷர்களை நிரப்பினபோது, கிறிஸ்துவின் அன்பின் ஜீவனாலே அவர்கள் நிரப்பப்பட்டபடியால், பற்பல வித்தியாசங் களுள்ள திரளான விசுவாசிகள் “ஒரே இருதயமும் ஒரே மனமும்” உள்ளவர்களானார்கள். அவர்கள் தேவ அன்பினால் நிறைந்தபடியால்.... எப்படி ஐக்கியப்படலாமென்று வருஷ கணக்கில் விவாதிக்காமல், சில நிமிஷத்தில் ஒற்றுமையடைந்தார்கள்! கிறிஸ்துவை நமது கண்முன் நிறுத்தி, அவரது அன்பின் சாயலுக்கொப்பாக மாற்றப்படுவதை நாம் பிரதானமாகத் தேடினால், ஆண்டவர் வேண்டிக்கொண்ட ஐக்கியத்தை நமக்குள்ளே காணலாம்! மற்றபடி எழுத்திலே இணைந்த CSI அல்லது IPC அல்லது LEF அல்லது CPM.... என, மூன்றெழுத்து ஐக்கிய குழுக்களுக்கு இன்று பஞ்சமேயில்லை! என்னதான் இவர்கள் ‘ஐக்கியம்’ என்ற பெயரை தங்கள் சபைக்கு வைத்துக்கொண்டாலும், உண்மையான ஐக்கியம் அவர்களுக்குள் வராது! “பிதாவே, நான் உம்மிலும்! நீர் என்னிலும்! இவர்கள் நம்மிலும்!” (யோவான் 17:16) என்ற உறவே, இயேசு வேண்டிக்கொண்ட ஐக்கியம்!

தேவ அன்பும், அதைத் தொடர்ந்து வரும் சகோதர அன்புமே திருச்சபையின் அழகு! இன்றும் அப்படிப்பட்ட ஐக்கியத்தையே நமக்கு ஆண்டவர் வாய்க்கச் செய்வாராக!


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!