பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
07.10.2021

10. கிறிஸ்துவுக்கு தியாக ஊழியர்களே தேவை!

image

ஒருவன், தன் முழுமையையும் தேவனுக்கு கொடுக்காத பட்சத்தில் “நான் கொடுத்தேன்!” என எதையாவது வைத்துக் கூறுவதில் ஒரு பலனும் இருக்காது. அதுபோலவே ‘தன் முழுமையையும்’ ஊழியத்திற்கு தியாகமாய் ஒப்புக்கொடாமல், “நான் ஊழியம் செய்தேன்” எனக்கூறுவதில் ஒரு பலனும் இருக்காது! சர்வவல்ல தேவனின் “சர்வவல்ல தன்மைக்கு”.... யாதொருவரின் ஆதரவும் தேவையில்லை! ஆனால், இன்றைய 21-ம் நூற்றாண்டு கிறிஸ்தவமோ, தேவனையும் அவருடைய ஊழியத்தையும் பரிதாப நிலையில் வைத்திருக்கிறார்கள்! “என்ன செய்வது, தேவனுக்கு என்னுடைய ஊழியம் தேவையாய் இருக்கிறது!” என்ற மனநிலையில் தேவன்மீது பரிதாபம் கொண்டு ஊழியம் செய்கிறார்கள். இந்த தரம்குறைந்த ஊழியர்களில் தேவன் பிரியப்படுவாரோ? நிச்சயமாய் இல்லை! தேவனுடைய கண்கள், குழுமி நிற்கும் இந்த அரைகுறை ஊழியர் கூட்டத்தைப் பார்த்து“செம்மையான இருதயம் கொண்டவன் ஒருவனும் இல்லை!”என்றே புறக்கணித்துவிடுவார்! தேவன்ஒருக்காலும் “சோடையான” ஊழியர்களை விரும்பியதே இல்லை! தேவன் மனம் மகிழும் ஊழியம்... நன்றிப்பெருக்கோடு, முழுமையான பரிசுத்தத்திலும் முழுமையான தியாகத்திலும்... அதிக பட்சத்தில் அல்ல “தங்கள் முழுமையும் கொண்டு” செய்திடும் ஊழியர்களே, அவரது இருதயத்தை மகிழச்செய்யும் ஊழியர்களாய் ஜொலித்திருப்பார்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!