பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

 

02.05.2024

18. ‘கிருபையின் நீர் வீழ்ச்சி’ தாழ நிற்பவர்களுக்கே உண்டு!



  நீதியை மெச்சிக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் யாருமே இல்லை எனலாம். ஆம், தேவன் அப்பழுக்கற்ற நீதியுள்ளவர். அவர் செய்வது அத்தனையும் சரியாகத்தான் இருக்கும்! அவர் பிழையற்றவர்! பிறர் உங்களைச் சரியாக நடத்தாமல், உங்களுக்குரிய பொதுவான அளவின் படியான மரியாதையைக் கூட காட்டாமல் இருந்தால்..... அவையாவும் தேவனை சிறிதளவும் பாதிப்பதேயில்லை! அவர் தொடர்ச்சியாக உங்களுக்குத் தரவேண்டிய கிருபையைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். “இந்த உண்மை” நம்மில் சதா - நிறைந்த மகிழ்வைத் தருகின்றதல்லவா?

 நாம் யாவரும் ஓர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்று ஓட வேண்டும் என வேதம் கூறுகிறது. நாமோ தாழ்மையென்னும் இந்த பந்தய சாலையில் கருத்தாய் ஓடிடக்கடவோம்! தாழ்மையுள்ளவர்களிடம் ஞானம் இருக்கிறது என வாசிக்கிறோம். இதற்கு மாறாக, நம்மைக் குறித்து மேட்டிமையான எண்ணங்களைக் கொண்டிருப்போமென்றால், அது மதியீனத்தின் உச்ச கட்ட மாகும். 

 உச்சி மலையிலிருந்து தாழ்விடத்திற்கு பொங்கிவரும் நீர் வீழ்ச்சி போலவே, தேவ கிருபை பொங்கி வருகிறது! நாமோ, அந்த தாழ்விடத்திலிருந்து விலகிச் செல்லாமல் “நிலைத்திருக்கும் தேவ கிருபையை” நேற்றும், இன்றும், என்றும் மாறாது பெற்று வாழ நம் யாவருக்கும் தேவன் அருள்வாராக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!