பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

08.10.2026                                                      41வது வாரம்

ஜெபத்தில் மூழ்கி வாழ்பவன், பரத்தின் முத்துக்களைப் பெறுவான்!

 அநேக ஜனங்கள், தியானித்து ஜெபிக்கும் நேரத்தை சோம்பலான வீண் நேரம் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு! உண்மை என்னவென்றால், மெய்வாழ்வின் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கிச் செல்லும் ஒருவன், நல்ல முத்துகளாகிய திவ்விய சத்தியங்களை அவன் பெறுவது மாத்திரமல்லாமல், மற்றவர்களுக்கும் பயன்களை கொண்டு வந்து தருகிறான்! கடலின் ஆழத்தில் மூழ்கும் ஒருவன் ‘மூச்சு பிடித்து’ செல்வது போல், அமைதியான தியானத்தில் செல்பவனும் இந்த உலகத்தின் இடையூறுகளுக்கு ‘மூச்சு பிடித்து’ விலகி நிற்கிறான். அப்போது மாத்திரமே, பரத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவியின் பெலன் கொண்டு ‘ஜெப தியானம் ஏறெடுக்க’ அவனால் முடியும். அவ்வித ஆவியில் நிறைந்த ஜெபம் இல்லாமல், அவனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வது ஒருபோதும் சாத்தியம் இல்லை. ஆம், தேவன் அமைதி தியானத்திலேயே கிரியை நடப்பிக்கிறார். அவர் பேசியதை அல்லது யாதொரு சத்தம் எழுப்பியதை ஒரு மனிதனும் கேட்டதில்லை. அவருடைய சத்தம் கேட்க வேண்டுமானால், ஒருவன் அமைதியான தியானத்தில் காத்திருக்கத்தான் வேண்டும்.

- ரத்னம் (நன்றி: பரலோக பொக்கிஷங்கள் மாதாந்திர பத்திரிக்கை)

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!