நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

04.06.2026 23வது வாரம்
‘ஒத்தவேஷம் மறுக்கும்’ சபையே, வலிமை நிறைந்தது!

தேவனிடத்தில் சொல்லிமுடியா அன்பு கொண்டு வாழும் ஒவ்வொரு சபைக்கும், ஆண்டவர் துணிவான அழைப்பை தயக்கமின்றி தருகிறார்.... “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்!..... அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்” என்றே கர்த்தர் சொல்லுகிறார்!! (2கொரி6:17). இவ்வித நேரடி அழைப்பை நெஞ்சார கேட்ட சபைகள் மாத்திரமே, தாங்கள் வாழும் இந்த கொடிய உலகிற்கு சமரசம் மறுத்து, வாழ்வதினிமித்தம் ஏற்படும் வலிமையான அனுபவங்களை சபையில் கண்டு மகிழ்வார்கள்!
ஒரு தூய சபை, உலகத்திற்கு ஒத்தவேஷம் மறுத்து எவ்வளவு முரணாக எழுந்து நிற்கிறதோ, அதைக் கொண்டே அந்த சபையின் வலிமையை கணக்கிட முடியும்!
இவ்வாறு ‘சத்தியத்தின் உறுதிக்கு’ துயரம் ஏற்படும் என்ற போதகம் வேதத்தில் மிகத் தெளிவாகவே இருக்கிறது! சபை சரித்திரத்திலும் திருஷ்டாந்தமாய் இருக்கிறது! ஆனால், அந்த உத்தம திருஷ்டாந்தத்தைப் பின்தொடர்ந்து வரும் சபைகளைத்தான் இன்று காண அரிதாய் இருக்கிறது!
- ரத்னம்
