பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
07.01.2021

1. ‘பெருமை ஒழித்து’ சாத்தானை வெல்லுங்கள்!

image

வெவ்வேறான தரத்தின்படி பொல்லாத குணங்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றன. இருப்பினும், அவை எல்லாவற்றிலும் பெருமையே மிக மிக மோசமானதாகும். பொதுவாக, இப்பெருமையானது, மற்றவர்கள் மீது தவறான அபிப்பிராயம் கொள்வதிலிருந்தே ஆரம்பமாகின்றது!

ஓர் இளைய விசுவாசியைத் தேவன் அவ்வளவு சீக்கிரத்தில் உயர்த்தி விடவே மாட்டார். ஏனெனில், அவ்வித உப்பிய நிலையில், சாத்தான் அவனுடன் கைகோர்த்து, அவனை அழித்துவிடுவான் என்பதைத் தேவன் அறிவார் (1தீமோ.3:6). இளைய விசுவாசிகள் ஞானமுள்ளவர்களாய் வளர்ந்திட வேண்டுமென்றால், தங்களின் புத்திக்கூர்மையான காரண உணர்வுகளைத் தள்ளிவைத்துவிட்டு, கர்த்தருக்குள்ளான தங்கள் ஸ்தல சபை மூத்த சகோதரர்களின் புத்திமதியை ஏற்றுக்கொள்ளவும், அவர்கள் ஒழுங்கு செய்து சிட்சிக்கும் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருத்தலும் வேண்டும்.

இவ்வாறாக, உங்களை மாத்திரமே நீங்கள் கண்டு வளர்வதற்குப் பதிலாக, பிறரை நியாயம்தீர்க்கும் இளைஞனாய் இருந்தால், வளர்ச்சி தடைபட்டு, நீங்கள் சாத்தானாகவே முடிவடைவீர்கள் என்பது திண்ணம்!!

கடந்தகாலத்தில் நீங்கள் எவ்வளவு மோசமாய் வீழ்ச்சியுற்றிருந்தாலும்..... அதை விட்டுத் தள்ளுங்கள்!...... இப்போதிருந்தே ஓர் நல்ல ஆரம்பம்செய்து உங்களை நீங்கள் தாழ்த்துவதில் உறுதியாக “நிலைத்திருந்தால்” உங்கள் வாழ்வில் சொல்லி முடியா மகத்துவங்கள் பரிமளிப்பதும் துவங்கிவிடும்!!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!