பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
25.01.2018

04. நன்மை ஒன்றே பேசும், நல்ல மரம்!

image

பிறரைத் தீமை பேசக்கூடாது என்பது மாத்திரம் சுவிசேஷம் இல்லை! பிறரின் நன்மை ஒன்றே பேசவேண்டும் என்பதில்தான் இயேசுவின் நற்செய்தி அடங்கியிருக்கிறது. சொந்தப் பிள்ளைகளைக் கூட அநாகரீக வார்த்தையால் திட்டுவதும், சொந்த சகோதரனை “மூடன்” என்று ஆத்திரமாய் பேசுவதுமான திருக்கு நெஞ்சம் கொண்டதுதான் நம் இருதயம்!

“ஆயமந வாந வசநந ழுடிடின - மரம் நல்லதாய் மாறினால்” நல்ல கனி தரும் (நல்லவை பேசும்) (மத்தேயு.12:33). பரிசுத்த ஆவியின் துணையோடு, தன் வேரில் (இருதயத்தில்) கோடாரி வைத்தவன் பெறுவதே நல்ல மரம்! அவனையே “நல்ல மனுஷன்” என இயேசு கூறினார்(வச.25).

இதுபோன்று, ‘ஆணி வேரில்’ கோடாரி வைத்து மரத்தை சாய்க்காமல், ‘பெரிய விரியன் பாம்பை’ குட்டி விரியன்பாம்பாக மாற்றினால், தொடர்ந்து பொல்லாதவர்களாகவே இருப்பீர்களென்றும், “நலமானவைகளை உங்களால் எப்படிப் பேச முடியும்?” எனவும் இயேசு எச்சரித்தார்! (மத்.12:34).

இவ்வாறு, யாதொருவன் தன் ‘இருதயம் நொறுங்கி’ ஆண்டவரிடம் வருகிறானோ, அவனையே அவர் காயம் கட்டி சுகமாக்குகிறார்! இருதயத்தை கனிதரும் அல்லது நல்லவைகளையே பேசும் ‘நல்ல மனுஷனாய்’ மாற்றுகிறார் (சங்.147:3).

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!