பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
20.01.2022

01.  ஆச்சரியமாய் நம்மை காக்கும் தேவன்!

ம் ‘நகம்’ எவ்வாறு உயிரற்ற செதிலோ, அதுபோலவேதான் நம் முடியும் உயிரற்ற செதிலாகும்! ஆகவேதான் முடியை வெட்டினால் இரத்தம் வருவதில்லை!! பார்த்தீர்களா.... உங்கள் உடம்பிலுள்ள ‘உயிரற்ற’ ஒரு முடியை ‘உயிருள்ள’ ஒரு அடைக்கலான் குருவிக்குச் சமமாய் அல்லவா இயேசு கூறிவிட்டார்!? (மத்.10:29-31). ஆகவே, உங்கள் உயிரற்ற 1-இலட்சம் முடிக்கு, உயிருள்ள 1-இலட்சம் குருவிகள் மதிப்பு என்றால், உங்கள் ‘உயிருள்ள’ கண், மூக்கு, கை, கால், இருதயம், கிட்னி, ஈரல்.... இவைகளுக்கொப்பாய் எத்தனை அடைக்கலான் குருவிகள் ஒப்பாகும்? கணக்கிலடங்கா..... கோடிகோடி குருவிகள் இருக்குமே! அப்படியானால், நமக்கு இணையாக எத்தனை அடைக்கலான் குருவிகள்? “அநேகம் அடைக்கலான் குருவிகள்!” விற்கப்பட்ட ‘இரண்டு அடைக்கலான் குருவிகளில்’ ஒன்றாகிலும் பிதாவின் அனுமதியில்லாமல், தரையிலே விழாது என நம் குரு உரைத்திருக்க.... தன் முழுமையையும் குருவின் பாதம் தத்தம் செய்துவிட்ட உத்தம சீஷன், தன் சரீரத்திற்கு பயப்படுவது நியாயம்தானா? வியப்பூட்டும் கணக்கை, நம் குரு கூறிவிட்டு.... “ஆதலால், பயப்படாதிருங்கள்” என கூறிய இனிய தொனி நம் நெஞ்சம் நிறைப்பதாக! நம்மை ஆச்சரியமாய் காக்கும் தேவனை, இந்த ஆண்டு முழுவதும் விசுவாசிப்போமாக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!