நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
தனது ராஜரீக ஊழியத்திற்கு ‘அழைப்பு கொண்டவனையே’ தேவன் கோதுமைமணியாய் தெரிந்தெடுத்து.... அவனை நொறுக்குகிறார்! மோசேயைப் போன்ற வனாந்திர ஜீவியமோ, யோசேப்பை போன்ற அடிமையின் சிறைவாழ்க்கையோ, இயேசுவைப்போன்ற தச்சுக்கூடமோ அல்லது அவரது சொந்த வீட்டாரின் பகையோ, நண்பனின் துரோகமோ.... அனைத்து சூழ்நிலையும் ஒன்றன் பின் ஒன்றாய் அனுப்பி, அவனை தேவன் நொறுக்குகிறார்! (ஏசாயா.53:10). அழிப்பதற்கு அல்ல... அவனை ஆசீர்வதித்து, தேவனுடைய ஜனத்திற்கு ஜீவன் தருவதற்கு.... மிகுந்த பலனை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு! (யோவான்.12:24). சர்வ வல்ல தேவனால் அழைக்கப்பட்டு, அவரது ஊழியனாய் இருப்பது சொல்லொண்ணா பாக்கியம். ஆகிலும், தேவ மனிதனுக்குரிய விலைக்கிரயம் செலுத்த துணிவு நெஞ்சம் கொண்டவர்களோ இன்று வெகு சொற்பம்!
சொற்பமேயானாலும்... தேவனால் அழைக்கப்பட்ட, நொறுங்குண்ட இந்த உத்தம தாசர்களைக் கொண்டே தமது பணியை தேவன் இன்றும் நிறைவேற்றுகிறார்!!