நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
‘உலகத்தின் பாவத்தை’ கொல்கொதா மேட்டில் இயேசு சுமந்த பாரச் சிலுவையையா நீங்கள் சுமந்திட இயேசு கூறினார்? அது, பாருலக இரட்சிப்பிற்கு அவர் சுமந்த சிலுவை! அதை, அல்ல! மாறாக “அவனவன் சிலுவையென” நம் சொந்த சிலுவையை சுமப்பதில்தான் நாம் இரட்சிக்கப்படுகிறோம்!
சுய கௌரவம், சுய மரியாதை, என தொடரும் எத்தனையோ சுயத்தை காணும்போது “அந்த சுயத்தை அல்லது நமக்குள் கிடக்கும் கொடிய சுமையை” மனதார வெறுத்து, அதை ஒழித்திட இயேசு தந்த வழிதான் “அவனவன் தன்தன் சிலுவை” என்ற ஒப்பற்ற வழி!
ஆகவேதான், தீய சூழ்நிலைகளில் வெளிப்படும் அந்த கொடிய சுயத்தின் சுமையை வேகவேகமாக சிலுவையில் இறக்கி..... அச்சிலுவையில் சுயம் மரித்திட ஒப்புக்கொடுக்கிறோம்!
இப்படியெல்லாம் நாம் சுமையாய் சுமந்த சுய- கௌரவம், சுய - மரியாதை சின்னாபின்னமாய் சிலுவையில் அறையப்பட்டு, ‘சுமை’ நாளுக்கு நாள் குறைவதுதான் ஒப்பற்ற சுவிசேஷம்!