பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
31.10.2019

11. சபையில் ‘மாயமற்ற அன்பு’ நிலைத்திருக்கட்டும்!

image

குரு அளித்த பயிற்சியை மேற்கொள்ளாமல் “ஆக்கினை செய்யும் உத்திரத்தோடே” தன் சகோதரனை நெருங்கி, “சகோதரனே நான் உன் துரும்பை எடுத்துப்போடட்டும்!” என நீ எப்படி கூற முடியும்? இவ்வாறு அவனை “சகோதரனே....” என அழைப்பதைக்கூட, ஆங்கில மொழி பெயர்ப்பின்படி “சினேகிதனே.....” என்று அழைப்பதைக் கூட “நீ எப்படிச் சொல்லலாம்?” என்றே இயேசு மறுத்தார்! ஆம், குற்றவாளியாய் தீர்க்கும் உத்திரத்தை எடுத்துப் போடாமல், “சகோதரனே.....” என்று அழைத்து சொல்லியவர்களை “மாய்மாலக்காரன்!” என்றே அழைத்தார் (வசனம்.42). கெத்செமனேயில் தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸை, “சினேகிதனே!” என்று இயேசு அழைத்தார்..... ஆனால், அதில் மாய்மாலம் இல்லை! அது ஏனென்றால் “நான் ஒருவரையும் ஆக்கினைத்தீர்ப்பு செய்ய வரவில்லை!” என இயேசு திட்டமாய் கூறினார் (யோவான்.3:17). ஆம், இயேசுவிடம் ‘ஆக்கினைதீர்ப்பின் உத்திரம்’ இல்லவே இல்லை!

யூதாஸ் கெட்டுப்போனான், அது ஏனென்றால், “கேட்டின் மகன் தானாய் கெட்டுப் போனான்” (யோவான்.17:12), அவ்வளவுதான்! இயேசு அவனை ஆக்கினைக்குள்ளாய் தீர்க்கவில்லை! பழிதீர்க்கவும் இல்லை!

நாமும், நம் குடும்பமும், நம் சபையும் நலம் பெற ‘நம் கண்ணின் உத்திரம்’ அகற்றி ஜீவிப்போமாக! ஆமென்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!