பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


18.04.2024

16.  தானும், தன்னுடையவர்களின் பரிசுத்தம் நாடுவான், உண்மை ஊழியன்!



 தேவனுடைய ஊழியர்கள் என, தங்களை அழைத்துக்கொள்ள பலர் துடித்து நிற்கிறார்கள். தாங்களாகவே தேவனுடைய ஊழியர்களாக மாறிவிட துடிப்பவர்கள், தேவனை தங்களுக்கு ஊழியனாய் மாற்றிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்! இதுபோன்றவர்கள், தேவனுடைய கிருபையை ஆதாயமாகப் பயன்படுத்திக் கொண்டு, இரட்சிப்பையும் மற்றும் பல அவரது அன்பின் பிரயாசங்கள் அனைத்தையும் தங்களுக்கே சாதகமாய் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். 

  இவர்களும்கூட, தேவனை தங்களுடைய நண்பனாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள் .... அதுஏனென்றால், அந்த நண்பன் மூலமாய் தங்கள் சொந்த விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்திடவேயல்லாமல், வேறெதற்கும் அல்ல! ‘தனக்காகவே தேவபக்தி’ என்ற நிலை மிகவும் கொடியதாகும்.

  உண்மையான நண்பர்களாய் தேவனுக்கு நிலைத்திருப்பவர்கள் ‘பாவத்தைக் குறித்த’ மிகுந்த கவனத்தை தங்கள் குணாதிசயமாய் பெற்றிருப்பார்கள்! அதை அவர்களும் வெறுப்பார்கள். அது மற்றவர்களிடத்திலிருப்பதையும் வெறுப்பார்கள்! 

 எவ்வித பாவத்தையும் தங்களுக்குத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்! அதுபோலவே, பிறரிடத்திலுள்ள பாவத்தையும் நியாயப்படுத்திட துணியமாட்டார்கள்! இவ்வித தரமே பூரணமான பரிசுத்தம்!


வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!