பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

16.01.2025

03. ‘மனுஷீக தலைமையில் ஐக்கியம்’ பனித்தூண்களுக்கு ஒப்பானது!

 வேதம் கற்றுக்கொடுக்கும் ஐக்கியம், முழு இருதயமான தெய்வ அன்பிலிருந்து பிறப்பதே ஆகும். அப்போது மாத்திரமே, அந்த கிறிஸ்தவ ஐக்கியத்தில் ‘மாறாத மனஉருக்கம்’ உண்டாக முடியும். இதுபோன்ற தூய ஐக்கியம் தேவனுடைய கிரியையின் மூலமாகவே நடைபெற வேண்டும்.

 ஒரு பக்தன் கூறும்போது, ‘ஸ்திரமான ஐக்கியம்’ (Solidarity)  உருவாக்குவதாகக் கூறி, ஒருவன் தன் சுய - பெலத்தில் ‘தன் தலைமையை முன் வைத்து’ முயலும்போது, அங்கு ஏராளமான பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு என கூறினார். அது எப்படியென்றால், வேறுபாடுகள் கொண்ட அனைவரையும் ‘ஒரே டிகிரி அளவில்’ பனித்தூண்களாய் மாற்றும் மனுஷீக ஸ்திரத்தன்மை! என எச்சரிக்கையாய் குறிப்பிட்டார். 

 இதுபோன்ற “உறைந்த பனித்தூண்களின் ஐக்கியம்” உருவாக்குவதற்கு ஒரே ஒரு பிரமாணம் என்னவென்றால், ‘எனக்கு’ அல்லது ‘என் அறிவுரைக்கு’ யாரும் ஒருபோதும் எந்த மறுப்பும் கூறாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடின பிரமாணமேயாகும்! இந்த அடிப்படைக்கு ஒத்து கொண்டவர்கள் மாத்திரமே, அவர்களின் ‘மனுஷீக ஐக்கியத்தில்’ இணைந்திருக்க முடியும் என்ற ஸ்திரமான.... ஆனால், உயிரற்ற ஓர் ஐக்கியம்!

 ஆகவே, ஐக்கியம் என்ற பெயரில் ‘ஒரே விதமாக இருக்க வைப்பது’ ஆவிக்குரிய மனப்பூர்வம் அல்ல!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!