நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

03.07.2025
27. ஓர் ஒழுங்கான ‘தியான ஜீவியத்தில்’ பெற்றிடும் உள்ளான விடுதலை!

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேடம் குயான் அம்மையாரின் வாழ்க்கை, சீரிய ஒழுங்கின் பக்தியான ஜீவியத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர்கள் பெற்றிருந்த ஆணித்தரமான ஒழுங்கான தியான வாழ்வின் பண்பு, அவர்கள் பல ஆண்டுகள் பிரெஞ்சு தேசத்தில் ஓர் கடுமையான சிறைவாசம் அடைந்தபோதும், அவ்வித கொடிய சூழ்நிலைகளுக்கு மேலாக தன் ஆவியில் எழுச்சியடைந்து கீழ்கண்டவாறு எழுதினார்கள்:
“சிறைக்கூண்டு என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டது; வெளியே பறந்திட என்னால் முடியாது! என் செட்டைகள் கட்டப்பட்டிருந்தாலும் என் இருதயமோ பூரண விடுதலை பெற்றிருக்கிறது! பூரண சுதந்திரத்துடன் பறக்கும் என் ஆத்துமாவின் விடுதலையை, என்னைச் சூழ்ந்திருக்கும் சிறைக் கதவுகள் என்ன செய்திட முடியும்?” என்று எழுதினார்கள்.
பார்த்தீர்களா, ஓர் ஒழுங்கான தியான ஜீவியத்தில்தான் எவ்வளவு வல்லமை அடங்கியிருக்கிறது!
- ரத்னம்
