நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
15.02.2024 | 07. ‘நாம் கனிகொடுக்க’ பிதாவாகிய தோட்டக்காரர் உதவி உண்டு! |
நாம் பூரணமாய் அவருக்கு நம்மை கையளித்து, இடைவிடாமல் அவரில் நிலைத்திருந்து ஜீவிக்கும்போது: இயேசு குறிப்பிட்ட கனியும், அதிக கனிகளும், மிகுந்த கனிகளும், நிலைத்திருக்கும் கனிகளும் நம்மில் உண்டாகும்! (யோவான் 15:1-5). கொடியானது செடியில் மாரிகாலத்திலும், கோடை காலத்திலும், குளிர் காலத்திலும், காற்றுக் காலத்திலும்.... எப்பொழுதும், இரவும் பகலும், நீங்காமல் நிலைத்திருந்து கனிகொடுப்பதுபோல, நாமும் இடைவிடாமல் நிலைத்திருப் போமாக! இவ்வாறு நிலைத்திருக்கும் ஜீவியத்தைக் கெடுக்கும்படி எத்தனையோ சோதனைகள் நமக்கு நேரிடும். நாம் கலங்கிச் சோர்ந்துபோக வேண்டியதில்லை.
பிதாவாகிய தோட்டக்காரர் நமக்கு உண்டு! அவர் கையிலிருந்து நம்மைப் பிரிக்க ஒருவராலும் முடியாது!