பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


20.03.2025

12. சபை ஊழியர் ‘தேவ அழைப்பு’ பெற்றவர்தானா?


  தேவ ஊழியத்தை நிறைவேற்றும்படி அழைக்கப்பட்டு, ஊழியர்களாய் வந்தவர்களில் சிலர், உலக விவகாரங்களில் அதிகச் சிரத்தையுள்ளவர்களாயிருக்கிறார்கள். குழுக்களை வைத்துக் கொண்டு விசாரணை செய்வதிலும், நியாயஸ்தலம் சென்று வழக்காடுவதிலும், வீடுகள் நிலங்கள் வாங்குவது விற்பதிலும் அதிக உற்சாகமுள்ளவர்கள்! ஜனங்கள் தங்கள் வழக்குகள் பிராதுகளை எடுத்துக்கொண்டு இவர்களிடம் வந்தவண்ணமாயிருப்பார்கள். 

 கர்த்தருடைய ஊழியத்தைப் பார்க்கிலும், இப்படிப்பட்ட காரியங்களில் இவர்களுக்குப் பிரீதி அதிகம்! ஆவிக்குரிய ரட்சிப்பின் வேலையில் இவர்கள் படுமோசம்! அழைக்கப்பட்டு வஞ்சனைக்குள்ளான இவர்களை விட்டுவிடலாம்.... ஆனால், மாம்சத்துக்குரியவர்கள் ஆவிக்குரிய வேலையை எப்படிச் செய்ய முடியும்? 

 இவர்களுக்குள்ள அறிவும் திறமையும் ஒரு பொருட்டல்ல! ‘தேவனால் அழைக்கப்பட்டு’ ஒப்புவிக்கப்பட்ட சபைக்காக பாடுபட்டு ஊழியம் செய்பவர்களே பாக்கியம் பெற்றவர்கள்! அப்படியில்லையென்றால், ‘அழைக்கப்பட்டோம்’ என ஊழியத்திற்கு வந்து, மண்ணுக்குரிய விசாரணைக்காரர்களாய் மாறுவார்கள்! இப்படிப்பட்டவர்கள், இந்த ஊழியத்தை விட்டு விலகி, தங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேறு வேலைகளைத் தெரிந்து கொண்டு, தங்கள் பிழைப்பை நடத்துவதே உத்தமம்! ‘அப்படிச்செய்யாமல்’ கிறிஸ்தற்ற ஊழியர்களாகிய இவர்கள், ஆத்தும பணியில் அக்கறையற்று, வழக்கம்போல் வேலை செய்து கொண்டு போவார்களானால், சபைகள் பாழாய் போகும்! இவர்கள் இருமனம் கொண்டவர்கள்..... கலப்பையில் கைவைத்துவிட்டு ‘உலகத்தை’ திரும்பிப் பார்ப்பவர்கள்!

 உத்தம ஊழியர்கள் இருக்க வேண்டிய சபைகளில், கிறிஸ்தற்ற ஊழியர்கள் இருப்பதுபோன்ற மோசமான காரியம் வேறில்லை! இவர்களைப்போலவே, சபையாரும் உலக மக்களாய் மாறும் கொடுமையை என்னவென்று சொல்வது!?


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!