நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
11.07.2024
28. ‘மோசமான மனநிலை’ ஜெயித்து வாழுங்கள்!
தேவ வசனத்தின்படி, சீர்ப்படுத்திய வாழ்க்கை வாழும் கிறிஸ்தவன், தான் நல்ல மனநிலையில் இருக்கும்போது எப்படி நடந்துகொள்வாரோ.... அதைப் போலவேதான் மோசமான மனநிலையின் நேரங்களிலும் நடந்துகொள்வார். ஆகவே, “இப்போதுள்ள மனநிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது!” என்ற குறைசொல் இவனிடம் ஒருபோதும் காணப்படுவதில்லை!
யாரெல்லாம் தங்கள் மனநிலையை ஜெயித்து “இதைச் செய்யும்படியான மனநிலை இல்லை” என்ற நிலையிலும் தங்கள் பணிகளை செய்கிறார்களோ, அவர்கள் மாத்திரமே தேவனுக்கென்று விடாமுயற்சியான ஊழியங்களைச் செய்வார்கள்! செய்து முடிப்பார்கள், ஆமென்.
- ரத்னம்