நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
தெய்வ அன்பிற்கு ‘மறுபுறம்’ உண்டு: அது, தம் அன்பின் சீஷர்கள் மூலமாய் நமக்கு தேவன் காட்டும் அன்பு! அந்த அன்பு, நம் உள்ளத்தை கோடைகாலத்தில் நம் தேகம் குளிர்ந்த நீரில் நீராடிக் களைப்பாறுவதுபோல் இருக்கும்! தேவனுடைய பிள்ளைகள் நமக்குப் பாராட்டும் அன்பை நினைத்து ஆச்சரியப்படும்போது, நமது கண்கள் திறக்கப்படுகின்றன..... அங்கும், நாம் ‘கர்த்தரையே’ அவர்கள் அன்பில் காண்கிறோம். நம் உள்ளம் தொட்ட அவர்களின் அன்பும், ஆண்டவருடைய தூய அன்பே! அது, தெய்வ பிள்ளைகளோடு நாம் ஐக்கியமாய் இருக்கும்போது, தேவன் நம்மீது பொழியும் அன்பாய் இருக்கிறது!
ஆ தெய்வீக அன்பின் அவதாரமே
உம்மில் அன்புகூருகிறவர்கள் மூலமாய்
நின் அன்பை வெளிப்படுத்துகிறதினால்
நினை யாம் வணங்குகிறோம்
என்ற கீதமே, என்னிலிருந்து பாய்ந்துச் சென்றது!