பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


28.052026                                                           22வது வாரம்

‘ஒழுங்கின் ஜீவியம்’ கிறிஸ்துவின் ஆளுகைக்குள் நடத்தும்!


 ழுங்கின் வாழ்க்கை வாழ்பவர்க்கும், ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்பவர்க்கும் இடையில், அவர்களின் சாதாரண அன்றாட ஜீவியத்திலேயே ஏராளமான வித்தியாசத்தை காண முடியும். 1) ஓர் ஓழுங்கின் வாழ்க்கை வாழ்பவர், தன்னுடைய உடைகளை ‘அடுக்கி’ வைப்பார். ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்பவரோ தன் உடைகளை அங்கும் இங்கும் போட்டுவைத்து விடுவார்! 2)ஓர் ஒழுங்கின் வாழ்க்கை வாழ்பவர், தான் உபயோகிக்கும் குளியல், கழிப்பறையை தானே கழுவி சுத்தமாக வைத்திருப்பார்! மற்றவர்களோ “வேறு யாராவது கழுவட்டும்” என அப்படியே விட்டு விடுவார்கள்! 3)ஓர் ஒழுங்கின் வாழ்க்கை வாழ்பவர், தன் வேலைகளை திட்டமிடுவதும்..... திட்டமிட்டவைகளை செய்தும் முடிப்பார்! மற்றவரோ தன் வேலைகளை ஒரு ஒழுங்கில்லாமல் தாறுமாறாக செய்வார்! 4)ஒழுங்கின் ஜீவியம் செய்பவர், தான் செல்லவேண்டிய இடங்களுக்கு எப்போதும் காலந்தாழ்த்தாமல் செல்வார்! குறிப்பாக சபை கூட்டங்களுக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்! .....இவ்வாறு சிறுசிறு காரியங்களில் காணப்படும் வேறுபாடுகள், பழக்க வழக்கத்தின் (Habit) அடிப்படையை கொண்டதேயல்லாமல், குணநலனை (Character) அடிப்படையாக கொண்டவையல்ல! இருப்பினும், தன் வாழ்வில் தேவனுக்குரிய மேன்மையானவைகளைப் பெற்றிடும் விசுவாசிகள், குறிப்பாக வாலிபர்கள், சிந்தித்து செயல்படுபவர்களாயும், சீராகவும், சுறுசுறுப்பாயும், காலந்தாழ்த்தாமலும், சுத்தமாய் செய்து முடிப்பவர்களாயும் இருப்பார்கள்!

 இவ்வாறாக, நம் முழு ஜீவியமும் கிறிஸ்துவின் ஆளுகைக்குள் வருவதே ‘ஒழுங்கு செய்யப்பட்ட’ வாழ்க்கை! என்பதை உணர்ந்து வாழ்ந்திடக்கடவோம்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!