நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
03.04.2025
14. சிலுவையின் பாதையில் “தெய்வ அன்பு” தீமையிலிருந்து என்னை காத்தது!
என் வீட்டிலிருந்த என் கணவர், மாமியார், உறவினர் உட்பட எப்படியாவது எனது மகிழ்ச்சியை அபகரிப்பதில் குறியாயிருந்ததைக் கண்டு, நான் ஆச்சரியப்பட்டேன். என் மனதின் இளைப்பாறுதலை குலைப்பதற்கு, இப்போது அவர்கள் எனது பக்தியான அன்பு தந்தைக்கு விரோதமாகப் பேசத்தொடங்கினார்கள்!
இவ்வாறெல்லாம், “பக்தியான என் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் விரோதம் செய்து பேசிய வார்த்தைகள்” என் ஆத்துமாவிற்கு பாதிப்பு ஏற்படாதபடி தெய்வ அன்பு என்னை காத்துக்கொண்டது!
யாதொரு இவ்வித சூழ்நிலையிலும் என்னை நியாயப்படுத்தி பேசுவதற்கும், தெய்வ அன்பு என்னை அனுமதிக்கவில்லை. இவ்வாறெல்லாம், எனது மாமியாரும் பணிப்பெண்களும் சேர்ந்து எனக்கு துன்பம் செய்ததை என் கணவரிடம் புகார் சொல்ல நான் செல்லவில்லை. நான் திருமணமாகி முதல் வருடத்தில், சற்று பதட்டம் அடைந்து என் கணவரிடம் பல புகார்கள் செய்திருந்தேன். அந்த ஒரு வருட காலங்கள், தேவனை நான் நெருக்கமாய் சந்திக்கத் தவறிய காலங்கள். ஆ, அந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, சிலுவையின் பாதையில் என்னிலே பெரிய மாற்றங்களை தேவன் செய்துவிட்டார்!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)