பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
 15.02.2022

02.கிறிஸ்தவம், வாழ வேண்டிய ஜீவியம்!

 

கிறிஸ்துவல்லாத எந்த சுபாவத்தையும் உதறித்தள்ளுங்கள். மற்றவர்கள் அதை வைத்திருந்தால் அது அவர்களுக்கு இருக்கட்டும், உங்களுக்கு அது வேண்டாம்! நீங்கள் அவரை கிட்டிச்சேர வேண்டுமென்றே தேவன் நோக்கமாய் இருக்கிறார்! அதற்காக, யாரையும் குறைகூறவோ குற்றம் சாட்டவோ வேண்டாம்.... நீங்களோ உன்னத பாதைக்கு தீவிரம் கொள்ளுங்கள்! “கிறிஸ்து உங்களுக்கு வேண்டும்!” அது ஒன்றே உங்கள் நோக்கமும் இலக்காயும் இருக்கட்டும். உங்கள் உள்ளத்தில் அவரே தொடர்ந்து வாசம் செய்திட வேண்டும். ஆம், “கிறிஸ்து ஒருவரே” உங்களுக்கு சம்பூரண நிறைவைத் தந்திட முடியும்! உங்கள் இருதயத்தை முற்றிலுமாய் பரிசுத்த ஆவியானவருக்கு அள்ளிக்கொடுத்து விடுங்கள்! உங்கள் சிலுவை எத்தனை பாரமாயிருந்தாலும், அதை மகிழ்வுடன் ஏற்று குருவைப் பின்பற்றுங்கள்! மற்றவர்களுக்கு அது எளிதாய் இருக்கட்டும்.... உங்களுக்கு அல்ல!  தவறியே ஆயினும் பிறர்மீது சிலுவையை வைத்துவிடாதீர்கள்!! இவை அனைத்தும் நாம் வாழ வேண்டிய கிறிஸ்தவ ஜீவியம்!!


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!